Saturday, 2 August 2014

பணி நிரந்தரம் பெற்ற செவிலியர்களை உடனே பணியில் இருந்து விடுவிக்க வேண்டும்-மரியாதையைகுரிய DPH குழந்தைசாமி சார் அவர்கள் ஆணை



கடந்த மாதம் ஒன்பது பத்து தேதிகளில் ஆறு ஆண்டுகள் தொகுபூதியத்தில் பணி ஆற்றி விட்டு பணி நிரந்தரம் பெற்ற செவிலியர்களுக்கு DMS அலுவலகத்தில் இருந்து பணி நிரந்தர ஆணை வழங்கபட்டும் பல்வேறு இடங்களில் தொகுப்பூதிய செவிலியர் பற்றாகுறை காரணமாக வேலை செய்ய ஆள் இல்லாத காரணத்தால் பணி விடுவிப்பு ஆணை வழங்க மறுத்து வந்தனர்.

இதனை நமது செவிலியசகோதரிகள் மூலம் மரியாதையைகுரிய DPH குழந்தைசாமி சார் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

நமது நலன் மேல் எப்போதும் அக்கறை கொண்ட மரியாதையைகுரிய அவர்கள் உடனே இந்த பிரச்னை மேல் நடவடிக்கை எடுத்து நமது செவிலியர்களின் ஊதியம் மற்றும் பணி காலம் பாதிக்கபடும் என்பதை கருத்தில் கொண்டு அனைத்து துணை இயக்குனர் அலுவலகங்களுக்கும் உடனே செவிலியர்களை பணி விடுவிப்பு செய்ய வேண்டும் என ஆணையை மின்னஞ்சல் மூலம் அனுப்பி உள்ளார்கள்.


மேலும் பணி நிரந்தரம் பெற்ற இடத்தில ஜாய்ன் செய்து விட்டு மீண்டும் தற்காலிகமாக பழைய இடத்திலேயே தற்காலிகமாக பணி புரிய ஆணை அனைத்து துணை, இணை, ESI, DMS, DME அலுவலகங்களுக்கு அனுப்பபட்டு உள்ளது.

ஆணையை டவுன்லோட் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்






No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.