Tuesday, 5 August 2014

ரெகுலர் பெறுவதற்கான ஒரே வழி:- முடிவு உங்கள் கையில்




ரெகுலர் பெறுவதற்கான ஒரே வழி:

இப்போது உள்ள சூழலில் அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களும் பணி நிரந்தரம் பெறுவதற்கு என்ன வழி என்று பல கோணங்களில் அலசி ஆராய்ந்ததில் நமது செவிலியசகோதரிகளால் என்ன செய்ய முடியும், எதற்கு ஒத்துழைப்பார்கள், இதில் உள்ள சாதகபாதகங்கள் என்ன, இருப்பதை கொண்டு சிறப்பாய் என்ன செய்வது என்று கலந்து ஆலோசித்ததில் இரண்டே இரண்டு வழிதான் உள்ளது.

பூனையை வைத்து கொண்டு புலியை மிரட்டுவது சிரமம் என்பதும் உண்மை, உழியை வைத்து தான் மலையை உடைக்க வேண்டும் என்பதும் உண்மை.

அந்த இரண்டு வழிகளில் எதை தேர்தெடுத்தாலும் எல்லா தொகுப்பூதிய செவிலியர்களும் அதற்கு ஒத்துழைக்கவேண்டும்.

நமது செவிலிய சகோதரிகளின் கையில் முடிவெடுக்கும் உரிமை தரப்படும்.

அந்த இரண்டு வழி(லி)கள் என்ன என்பது இந்த மாத இறுதிக்குள் தெரிவிக்கபடும்.

நீங்கள் எதை ஏற்று கொள்கிரிர்களோ அதை நாங்கள் முன்னெடுத்து செல்வோம்.

எதையும் ஏற்று கொள்ள வில்லை எனில் எல்லாவற்றையும் மூடி வைத்து விட்டு நாங்களும் பத்தோடு பதினொன்றாய் பணிக்கு செல்வோம். பணி நிரந்தரம் எப்போது வரும் என்ற எதிர்பார்போடு

முடிவு உங்கள் கையில் சகோதரிகளே
 

Comment Box is loading comments...

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.