Tuesday, 19 August 2014

தொகுப்பூதிய செவிலியர்கள் கூட்டம்:


 
 


இடம்: திருச்சி-NGO HALL-கோர்ட் அருகே

நாள்: 23/08/2014-சனிக்கிழமை

நேரம்: 2 P.M to 5 P.M.
 

வரும் சனிக்கிழமை 23/08/2014 அன்று திருச்சியில், கோர்ட் அருகே உள்ள NGO ஹாலில் வைத்து தொகுப்பூதிய செவிலியர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.


அடுத்து தொகுப்பூதிய செவிலியர்கள் மேற்கொள்ளபட வேண்டிய உறுதியான நடவடிக்கைள் என்ன என்பதை இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம்.
 

இந்த கூட்டத்தில் எடுக்கபடும் முடிவுகள் அடுத்து முன்னெடுத்து செல்லப்படும்.

அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களும் தவறாமல் கலந்து கொள்ளவும்.

இதற்கு மேல் இங்கு விரிவாக இங்கு தெரிவிக்க இயலாது.


செவிலிய துறையில் பெரும்பாலும் 95% பெண்கள் மட்டுமே பணி புரிகின்றார்கள். பலவிதமான இன்னல்களை அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்.

 

இது துறையின் சாபக்கேடு என்று ஒரு மூலையில் உக்கார்ந்து கொண்டு புலம்பி இருக்காமல், அதை மாற்ற புதிய முயற்சியை முன்னெடுப்போம்.


உங்கள் ஆதரவு கரங்கள் இருந்தால் மட்டுமே இது வலுபெற்று உருப்பெற்று வெற்றிபெறும்.
 

மாற்றத்தை மற்றவர்களிடம் எதிர்பார்க்கவேண்டாம். முதலில் உங்களில் ஏற்படுத்தி கொள்ளுங்கள்.
 

முயற்சியே மேற்கொள்ளாமல் மற்றவர்களை குற்றம் சொல்வது அபத்தமானது. ஆனால் சத்தியமாக முயற்சி மேற்கொள்ளவில்லை எனிலோ அல்லது நீங்கள் ஆதரவு தராமல் அலட்சியமாக இருக்கும் பட்சத்திலோ ரெகுலர், விடுப்பு, ஊதியம், அடிமைதனம் எல்லாவற்றிலும் எதிரான விசயங்ககள் மட்டுமே நடைபெறும். பின்பு வருத்தபட்டு ஒன்றும் செய்யமுடியாது. வலிகளை தாங்கி கொள்ள தயாராக வேண்டியதுதான்.

 

 

வெறும் வலிகளை மட்டும் ஏற்றுகொள்வதா அல்லது வலிகளை மாற்றும் வழிகளை ஆராய்ந்து வெற்றி பெற துணைபுரிவதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.