Monday, 18 August 2014

வருடாவருடம் ஒரு கூட்டம், அதன் பின் ஒரு ஓட்டம், வசூலில் ஒரு காட்டம், வேட்டை நடத்திவிட்டு, பின்பு ஒரு நோட்டம்நிரந்தர அரசு செவிலிய சங்கத்தின் சார்பில் விரைவில் கூட்டம் நடைபெற இருப்பதாக சொல்கிறார்கள், நடந்தால் மரியாதையைகுரிய தமிழ்நாடு கவர்மென்ட் நர்சஸ் அசோசியேசன் தலைவர் அறிவுகண் மேடம் மற்றும் செயலாளர் லீலாவதி மேடம் அவர்களிடம் அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களுகளும் கேட்க நெனைக்கும் நியாமான தகவல்கள் ?
 
 
இந்த கேள்விகளில் ஏதேனும் தவறு இருந்தால் தயவு செய்து அடியேனின் தவறை பொறுத்தருள்க
 
இத்தனை ஆண்டுகள் தான் தொகுப்பூதிய காலம் என்று தொகுப்பூதிய செவிலியர்களின் தொகுப்பூதிய காலத்தை இத்தனை ஆண்டுகாலமாக தாங்கள் வரன்முறை படுத்தாதன் காரணம் என்ன ?
 
 
இரண்டு ஆட்சியிலும் ஓட்டுமொத்த செவிலிய சமூகத்தின் பிரதிநிதியாக தலைமைபொறுப்பில் உள்ள தங்களால் எந்த ஆட்சியில் நமது நிலையை ஆட்சியில் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று தங்களால் வெற்றி பெற முடியவில்லையே, இந்த நிலைக்கு காரணம் முயற்சிகள் தவறா அல்லது முயற்சி மேற்கொண்டவர்கள் மேல் உள்ள தவறா?
 
ஆரம்ப சுகாதார நிலையங்களின் தொகுப்பூதிய செவிலியபிள்ளைகளின் 6 மணி நேர பணி நேரத்தை 12 மணி நேரமாக மாற்றி 2012 ஆம் ஆண்டு அரசு ஆணை பிறப்பித்தபோது அதை தாங்கள் எதிர்த்து குரல் எழுப்பபடாதன் காரணம்?
 
மூன்று செவிலியர்கள் பணி புரிந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரண்டு செவிலியர்களாக மாற்றி ஆணை பிறப்பித்து பெண் பிள்ளைகளின் தலையில் சுமையை எதற்காக கண்டுகொள்ளாமல் எங்கள் பிள்ளைகளை அனாதையாக விட்டு விட்ட காரணம் ?
 
 
 
இரண்டு செவிலியர்கள் தான் ஒரு நிலையத்திற்கு என்ற சூழலில் ஒரு செவிலியர் எதோ ஒரு சூழலில் விடுப்பு எடுத்தால் அடுத்த செவிலியர் 24 மணி நேரமும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணி புரிந்து கொண்டு உள்ளார்களே அவர்களுக்கு தாங்கள் தரும் பதில் என்ன ?
 
கள்ளகுறிச்சியில் 2012  ஆம் ஆண்டு செயற்குழு கூட்டம் நடத்தி தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் கண்டிப்பாக பெற்று தருவேன், அதற்காக பேரணி நடத்துவோம் என்ற முழங்கி விட்டு அதற்காக அனைவரும் சங்கத்தில் உறுப்பினராக சேரவேண்டும், அதற்கான சந்தாவை கட்டவேண்டும், பேரணி போக 500 ரூபாய் அனைவரும் தரவேண்டும் என்று முழங்கி விட்டு பல இடங்களில் வசூல் செய்து வ விட்டு அந்த பேரணியை நடத்தாமல் விட்டு விட்டுவிட்ட காரணம் என்ன ? தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் பெற்று விட்டார்கள் என்ற காரணத்தால ?
 
மருத்துவ துறை சார்ந்த ஒரு வருடம் இரண்டு வருட படிப்பை படித்தவர்கள், பகலில் மட்டுமே பணிபுரியும் அவர்களுக்கு 24 மணி நேரமமும் இரவு பகலாக பணி புரியும் தொகுப்பூதிய செவிலிய பிள்ளைகளை விட அதிகம் தொகுபூதியத்தில் சம்பளம் வாங்குகிறார்கள் என்பது எதற்கு தங்களின் மேலான கவனத்திற்கு ஏன் வரவில்லை?
 
வாங்கும் அரை ஊதியமும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அலுவலக ஊழியர்களிடம் கெஞ்சி கூத்தாடி வாங்கும் அவல நிலைக்கு தொகுப்பூதிய செவிலியபிள்ளைகள் தள்ளபட காரணம் என்ன?
 
ஆறாவது வருடம் முடித்து ஏழாம் பணி புரியும் 2007 BATCH சேர்ந்த 160 செவிலியர்களிடம் இந்த மாதம் ரெகுலர் வர இருக்கிறது, வரவேண்டுமென்றால் 5000 உடனே தாருங்கள் என்று உங்கள் பெயரை சொல்லிகொண்டு சிலர் கேட்கிறார்களே அது உங்கள் செவிகளுக்கு எட்ட வில்லையா, அல்லது எட்டாத தூரத்தில் தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் உங்களுக்கும் ஆனா இடைவெளி இருக்கிறதா ?
 
 
பணி நிரந்தம் நாங்கள் தான் வாங்கி தந்தோம் என்று சொல்லிக்கொண்டு காலி பணிஇடங்களில் தானாக வந்த (retirement vacant ) பணி நிரந்தரத்தை நாங்கள் தான் வாங்கி தந்தோம் என்று சொல்லிக்கொண்டு 2007 batch தொகுப்பூதிய செவிலியர்கலிடம் சிலர் 5000 ரூபாய் கலெக்ட் செய்தது, இதை கொடுத்ததால் தான் தனக்கு ரெகுலர் வந்தது என்று குருட்டுதனமாக தொகுப்பூதிய செவிலியர்கள் என்னும் வண்ணம் அவர்கள் கைவண்ணம் இருந்தது தங்கள் கவனத்திற்கு வரவில்லையா ?
 
பத்து நாட்களுக்கு முன் போராட்டம் செய்து பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கை நியாமானது என்று அரசுக்கு உணர்த்தி ஒரே வாரத்தில் முறையான ஊதிய உயர்வுவை பெற்ற போல் இத்தனை ஆண்டுகாலம் செவிலியதுறையின் தலைமை பொறுப்பில் உள்ள தங்களால் எந்த ஒரு சாதனையும் செய்ய முடிய வில்லையே ! எங்கள் வேதனையும் தங்கள் சாதனையும் தொடர்பு இல்லாமல் தொலைந்து கிடைக்கிறதே?
 
சுருக்கமாக சொன்னால் இன்னும் MMC & ஸ்டான்ட்லி மருத்துவகல்லுரி மருத்துவமனைகளில் ஆறாம் ஆண்டு தொகுபூதியத்தில் வெறும்  5500 ரூபாய்க்கு துப்புரவு பணியார்களை விட குறைவான ஊதியத்தில் செவிலியபிள்ளைகள் பணி புரிகிறார்களே அதற்காக தாங்கள் வருத்த படவில்லையா ?
 
பயிற்சி மருத்துவர்களின் ஊதியத்தை ஒரே வாரத்தில் உயர்தி அதற்கு அரசு ஆணை வெளியிட முடிகிற நிர்வகாத்தல் MMC & ஸ்டான்ட்லி, NCD, CEMONC பிரிவுகளில் பணி புரியும் செவிலியர்களுக்கு ஒரு ஊதிய உயர்வு ஆணையை வெளியிட இரண்டரை ஆண்டுகளை தாண்டிய பிறகும் கூட அந்த கோப்பு முதல்வர் அவர்களின் பார்வைக்கு வைக்கபட்டு உள்ளது என்ற நிர்வாகத்தின் மென்மையான போக்கை தங்களால் கேள்வி கேட்க ஏன் முடியவில்லை ?
 
தமிழகத்தில் 1777 மேற்பட்ட 2008 batch செவிலியர்கள் ஐந்தாம் வருடம் முடித்து ஆறாம் வருடத்திலும் 2300 மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் மூன்றாம் வருடம் முடித்து நான்காம் வருடத்திலும் பணிபுரியும் செவிலியபிள்ளைகளின் வாழ்வில் தங்களால் எதற்கு ஒரு விடியலை ஏற்படுத்த முடியவில்லை ?
 
 
மாவட்ட மருத்துவமனைளை மருத்துவகல்லுரி மருத்துவமனைகளுக்கு இணையாக தரம் உயர்த்திய அரசு ஆணையில் மருத்துவர்களுக்கு மட்டும் நிரந்தர பணி இடங்களாக அறிவித்து விட்டு 1160 செவிலிய பணி இடங்களை தொகுப்பூதிய செவிலிய பணி இடங்களாக அறிவித்த அரசு ஆணையை ஏன் தங்களால் நிரந்தர பணி இடங்களாக அறிவிக்க வைக்க இயலவில்லை ?
 
அதற்காக தாங்கள் கேக் வெட்டி கொண்டாடியது தான் நமக்கு மிச்சமா ? அல்லது அறிவிக்கபட இருப்பது நிரந்தர பணி இடங்களா அல்லது தொகுப்பூதிய பணி இடங்களா என்பதை கூட முறையாக தெரிந்து கொள்ளாமல் அதை வெற்றி விழா போல கொண்டாடி அதை தொலைகாட்சியில் பார்த்த செவிலியர்கள் 1160 பணி இடங்கள் வரும் இதன் மூலம் நாம் பணி நிரந்தரம் பெற்று விடுவோம் என்ற எண்ணி ஏமாற மறைமுக காரணம் ஆகி விட்டிர்கள் என்பது .குற்றமா? அல்லது தாங்கள் நடந்து கொண்டது தவறு என்று சுற்றி காட்டிய ஒரு செவிலியரை தாங்கள் வசைபாடியது குற்றமா ?
 
அரசு மருத்துவகல்லூரிகளில் MCI விதிப்படி செவிலியர்கள் நியமிக்கபடவில்லை என்பதும் தங்களுக்கு தெரிந்து இருந்தும், தாங்கள் பல வருடமாக பணி புரியும் திருச்சி அரசு மருத்துவ கல்லூரியிலேயே வெறும் 132 நிரந்தர செவிலியர்களை வைத்து கொண்டு 372 நிரந்த செவிலியர்கள் இருப்பதாக  நிர்வாகம் கணக்கு காண்பிக்கும் போது அதை தடுத்து உண்மையில் அங்கு 372 [i]செவிலியர்கள் நியமிக்கபட முயற்சி எடுக்காமல் இல்லாமல் இருப்பதாக காண்பிக்கபட்ட பணி இடங்களில் பணி நிரந்தரம் பெற்று பணி ஆற்ற வேண்டிய தொகுப்பூதிய பிள்ளைகளின் வாழ்வில் விடியலை விலக்கி இருளை நீடித்த நிர்வாகத்திற்கு தலைமை பொறுப்பில் உள்ள தாங்கள் துணை போவது நியாமா?
 
நிதி துறை எங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதை விட
எங்கள் நீதி துறை, தங்கள் நிதி துறையின் காரணமாக, எங்களுக்கு முறையாக கிடைக்க வேண்டிய நியாயத்தை, நீதியை, நிதியை, தங்களின் நிதிக்காக நீடித்தது நிதர்சனம நிஜம் ?
 
வருடாவருடம் ஒரு கூட்டம், அதன் பின் ஒரு ஓட்டம், வசூலில் ஒரு காட்டம், வேட்டை நடத்திவிட்டு, பின்பு ஒரு நோட்டம்,
இதுதான் அரசு நிரந்தர செவிலிய சங்கத்தின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் மேல் கூறபடும் குற்றசாட்டு, உங்களுக்காக சொல்லவேண்டுமென்றால் கயவர்கள், கள்வர்கள் எங்களை போன்ற கோமாளிகள் உங்களை போன்ற செவிலிய துறைக்காக தன்னை தியாகம் செய்து கொண்டு உழைத்து கொண்டு இருக்கும் தங்கள் மேல் சுமத்தும் குற்றசாட்டு, இதனை பொய்யாக்கி எங்கள் முகத்தில் கரியை பூசினால் சந்தோஷபடுவோம்.
விடியதா வாழ்கையில் விலகாத இருளை துணையாக கொண்டு வாழும் எங்கள் வாழ்கை மாறாது, உங்கள் கொள்கையும் பார்வையும் மாறாது.
 


[i]

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.