Tuesday, 5 August 2014

ஏமாற்றுகார கும்பல் கிளம்பி விட்டது:-தொகுப்பூதிய செவிலியர்கள் தலையில் பொங்கல் வைக்க வசூல் வேட்டைக்காரர்கள் தங்களது பழைய பாணியை கையில் எடுத்துவிட்டார்கள்.




யாருக்கும் எதுவம் அனுப்ப தேவை இல்லை


ஒரு MAIL ID குடுப்பார்கள்பெயர்போன் நம்பர்,  ரேங்க் அனுப்ப சொல்லுவார்கள், அப்புறம் மீட்டிங்னு சொல்லுவாங்க, கடைசியாக போராட்டம் பேரணி என்று  காசு கேட்பார்கள், கடைசியில் அவர்கள் போட்ட நாமத்தோடு இவர்கள் ஒரு நாமம் போடுவார்கள், கையெடுத்து கும்புடு போட்டு கேட்டுகொள்கிறேன் ஏமாந்து போயிராந்திங்க, தேன்ஒழுக ஒழுக பேசுவாங்க அப்பகூட ஏமாந்து போயராதிங்க சகோதரிகளே 



ரெகுலர்காண ஆக்க பூர்வமான பணிகளை பாக்குறத இப்படி ஏமாத்த நினைபவர்களிடம் இருந்து காப்பாற்ற முயற்சி எடுப்பதா என்று தெரியவில்லை.

 
 
நாமம் போட்டு ஒரு UPDATE நாம் கொடுத்த உடன் நமது முயற்சி தோல்வியில் முடிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை, உறுதியாக விரைவில் பணி நிரந்தம் பெறுவோம், வழிகள் என்ன என்பதை இந்த மாத இறுதிக்குள் தங்களுக்கு தெரிவித்து விடுவோம். இதை நாம் இங்கு தெரிவிகக் காரணம்

செவிலிய கூட்டத்தில் உள்ள ஒரு நான்கு ஐந்து குள்ளநரிகள் ஏற்கனவே தொகுப்பூதிய தொகுப்பூதிய செவிலியர்களை பலரை பல முறை ஏமாற்றி இருப்பதால் தொகுப்பூதிய செவிலியர்களை ஏமாற்றுவதற்கு இது தக்க சமயம் என கருதி களத்தில் இறங்கி தங்களுக்கு தெரிந்த செவிலியர்களை மூளை சலவை செய்து கொண்டு இருக்கின்றனர். 

அதன் சாராம்சம் என்னவேனில் மரியாதையைகுரிய நிரந்தர அரசு செவிலிய சங்கத்தின் தலைவி லீலாவதி அவர்களின் பெயரை சொல்லிக்கொண்டு, நமது நிலையை அவர்களுக்கு விளக்கி அவர்கள் தலைமையில் ஒரு மீட்டிங் போடலாம், வழக்கம் போல போராட்டம் பண்ண போகிறோம், பேரணி போக போகிறோம் என்று தொகுப்பூதிய செவிலியர்களிடம் பணம் கலெக்ட் செய்யலாம் என்று முயற்சியில் இறங்கி உள்ளனர். எனக்கு தெரிந்து அவர்கள் பலவருடமாக தமிழகத்தில் செவிலிய துறையில் தான் இருகின்றார்.

எனவே புதிதாக நாம் சென்று எதுவம் விளக்கு விளக்கு என்று விளக்க தேவை இல்லை.



அரசு நிரந்தர செவிலிய சங்கத்தின் மிக உயரிய பொறுப்பில் உள்ள மரியாதையைகுரிய மேட்டேர்ன் லீலாவதி அவர்களுக்கு எல்லா பிரச்னையும் நன்கு தெரியும். அவர்களை பற்றி நமக்கும் நன்கு தெரியும், 

6 மணி நேர பணி நேரத்தை தொகுப்பூதிய செவிலியர்களுக்கு 12 மணி நேரமாக மாற்றி அரசு ஆணை பிறப்பித்தது தெரியும்?

மூன்று செவிலியர்கள் பணி புரிந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரண்டு செவிலியர்களாக மாற்றி ஆணை பிறப்பித்து தொகுப்பூதிய செவிலியர்கள் தலையில் சுமையை ஏற்றியது தெரியும்?

தொகுப்பூதிய செவிலியர்கள் தங்கள் குடும்பத்தையும் குழந்தையும் விட்டு விட்டு நடுகாட்டிலும் மலையிலும் 12 மணி நேரம், 24 மணி நேரம் என்று தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் பணி புரிவது தெரியும்?

ஒரு வருடம் இரண்டு வருடம் படித்தவர்கள் கூட நம்மை விட அதிகம் தொகுபூதியத்தில் சம்பளம் வாங்குகிறார்கள் என்பது தெரியும்? 
ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஊதியம் வாங்கும் செவிலியர்கள் பற்றி அவர்களுக்கு தெரியும்?

ஆறாவது வருடம் முடித்து ஏழாம் பணி புரியும் 2007 BATCH 160 செவிலியர்கள் பற்றியும் அவர்களுக்கு தெரியும்.

பணி நிரந்தம் நாங்கள் தான் வாங்கி தந்தோம் என்று சொல்லிக்கொண்டு காலி பணிஇடங்களில் தானாக வந்த(retirement vacant ) பணி நிரந்தரத்தை நாங்கள் தான் வாங்கி தந்தோம் என்று சொல்லிக்கொண்டு 2007 batch தொகுப்பூதிய செவிலியர்கலிடம் யார் யாருக்காக 5000 ரூபாய் கலெக்ட் செய்தார்கள் என்பதும் தெரியும்.

தமிழகத்தில் 1777 மேற்பட்ட 2008 batch செவிலியர்கள் ஐந்தாம் வருடம் முடித்து ஆறாம் வருடம் பணி புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதும் தெரியும். 

2300 
மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் மூன்றாம் வருடம் முடித்து நான்காம் வருடம் சிறப்பாக தொகுபூதியத்தில் பணி புரிகிறார்கள் என்பதும் தெரியும்.

NCD & CEMONC 
செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு ஆணை வரவில்லை என்பதும் தெரியும்.

மாவட்ட மருத்துவமனைளை மருத்துவகல்லுரி மருத்துவமனைகளுக்கு இணையாக தரம் உயர்த்திய அரசு ஆணை 32 மருத்துவர்களுக்கு நிரந்தர பணி இடங்களாக அறிவித்து விட்டு 1160 செவிலிய பணி இடங்களை தொகுப்பூதிய பணி இடங்களாக அறிவித்தும் தெரியும், அதற்காக அவர்கள் கேக் எல்லாம் வேண்டி கொண்டினார்கள் என்பதும் தெரியும்.

அரசு மருத்துவகல்லூரிகளில் MCI விதிப்படி செவிலியர்கள் நியமிக்கபடவில்லை என்பதும் தெரியும். 

செவிலிய துறை இவ்வாறான மோசமான நிலையில் இருபதற்கு காரணம் யார் என்பதும் தெரியும். 

இவர்கள் நோக்கம் மிக எளியது தொகுப்பூதிய செவிலியர்கள் அதுவும் குறிப்பாக பெண்கள் மூளை இல்லாதவர்கள், பயந்தாகொல்லிகள, என்னஎதுவேண்று ஆராய தெரியாது, ரெகுலர் வேண்டுமா காசு கொடு என்று கேட்டால் கொடுத்து விடுவார்கள் என்ற ஏளன எண்ணம்.

மிகவும் கெத்தாக அவர்களிடம் சொல்லி இருக்கிறோம், எங்கள் 2008 BATCH தொகுப்பூதிய செவிலியர்களிடம் உங்கள் பருப்பு வேகாதது என்று ?
இப்பவும் சொல்கிறேன் இதையும் தாண்டி இந்த குள்ளநரிகள் ஒரு வேளை மீட்டிங் எதாவது நடத்தினால் எல்லாரும் பணம் தாருங்கள், பேரணி செல்வோம், டோகேன் STRIKE பண்ணுவோம், என் ரத்தம்கொதிக்கிறது, எல்லா செவிலியர்களும் வெளியே நிற்பார்கள், யானையை பூனை யாக்குவேன், பூனையை யானை ஆக்குவேன், ஒரு 500 ரூபா கொடு இதுதான் அந்த மீட்டிங்இன் சாரஅம்சம்.


உண்மையில் நமக்காக உழைத்து நமது தொகுப்பூதிய செவிலியர்கள் வாழ்வில் விடியல் ஏற்படுத்தி கொடுத்து இருந்தால் நாங்களே கலெக்ட் செய்து கொடுப்போமே

அப்படி யாரேனும் தங்களிடம் பணம் கேட்டால் அவன் மூஞ்சி மேல் காரி தூதூ என்று துப்பி, என்டா மானம் கெட்ட நாய்களா சோறு தானே திங்கிற, இல்ல வேற எதுவும் தின்கீரியா, இப்படி கேக்க உனக்கு வெக்கமாக இல்லையா, என்ற இனிய சொற்களையும், மேலும் தங்களுக்கு தெரிந்த இன்சொற்கள் வேறு ஏதேனும் இருந்தால் அதையும் பயன்படுத்தி அவர்களை வாழ்த்தவும்.

அந்த குள்ளநரிகள் யாரேன PHOTO வுடன் திருடர்கள் ஜாக்கிரதை என்ற தலைப்பில் தேவைபட்டால் வெளியிடபடும்.
                                                                                                                   ரவி சீத்தாராமன்

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.