Tuesday, 5 August 2014

தொகுப்பூதிய செவிலியர்கள் கவனத்திற்கு-அரசின் சீர்திருத்த நடவடிக்கைள்:



  • 1.       சம்பளம் பேங்க் மூலமாக மட்டுமே வழங்கபடவேண்டும் செக் மூலமாக கண்டிப்பாக தரப்பட கூடாது. PD அவர்கள் ஆணை
    2.       மாதம் மாதம் ஏழாம் தேதிக்குள் ஊதிய நகல்
    3.      அரியர் மற்றும் ஊதியம் BEFORE 04/08/2014:
    4.   மூன்று மாதங்களுகான ஊதிய தொகை அரசில் இருந்து விடுவிப்பு (ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்)
    5.    MMU செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு பொருந்தும் என்ற ஆணை:
   ஊதியம் பேங்க் மூலமாக மட்டுமே வழங்கபடவேண்டும் செக் மூலமாக கண்டிப்பாக தரப்பட கூடாது. PD அவர்கள் ஆணை











NRHM கீழ் பல்வேறு பிரிவுகளில் கிராமப்புறங்களில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மாதசம்பளமானது நேரிடையாக பேங்க் அக்கவுன்ட் மூலமாக வழங்கபடாமல் பல்வேறு இடங்களில் கிம்பளம் கொடுத்தால் மட்டுமே வழங்கபடும் என்ற சூழல் இருப்பதாலும், மேலும் அலுவலகம் சென்று கைகட்டி வாய்மூடி ஐயா சாமி என்று கும்பிடு போட்டு கையேந்தவேண்டிய சூழல் உள்ள நிலையில்


மரியாதையைகுரிய MISSION DIRECTOR  M.S. SHANMUGAM ஐயா அவர்கள்  மற்றும் மரியாதையைகுரிய இயக்குனர் மகேஸ்வரன் சார் அவர்கள் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம்பளமானது கண்டிப்பான முறையில் பேங்க் மூலமாக அதாவது ECS/RTGS என்ற முறையில் மாதம் மாதம் வழங்கபடவேண்டும் என்று ஆணை பிறப்பித்து அதனை அனைத்து துணை இயக்குனர் அலுவலகங்களுக்கும் கடந்த  30/07/2014 அன்று மின்னஞ்சல் அனுப்பபட்டு உள்ளது. இதற்கு முதல் முயற்சி எடுத்து நமக்காக உதவிய மரியாதைக்குரிய மக்கள் நல்வாழ்த்து துறை செயலர் ராதகிருஷ்ணன் சார் அவர்களுக்கு மிக்க நன்றி.

இதனை முறையாக DD அலுவலக AO மற்றும்  DMCHO அவர்கள் கண்காணிக்க வேண்டும் என ஆணையில் தெரிவிக்கபட்டு உள்ளது.


Ensure that the monthly remuneration to the contractual Staff Nurses  is paid through ECS/RTGS only and deviation against this by giving payment by cheque or cash will be viewed very  seriously and insist Administrative Officer and DMCHO to monitor



மாதம் மாதம் ஏழாம் தேதிக்குள் ஊதிய நகல்



ஓவ்வொரு மாதமும் ஏழாம் தேதிக்குள் கடந்த மாத ஊதியம் அனைத்து 

தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் வழங்கபட்டு விட்டதா என்பதை அனைத்து 

துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்தும் NRHM அலுவலகத்திற்கு 

மாதமாதம் அனுப்பவேண்டும் என்று உத்தரவிட பட்டு உள்ளது.



அரியர் மற்றும் ஊதியம் BEFORE 04/08/2014:

கடந்த ஜூன் மாதம் வரை யாருக்கேனும் ஊதியம் மற்றும் பழைய அரியர்ஸ் மற்றும் இதர அலவன்சு ஏதேனும் வழங்கபடாமல் இருந்தால் எத்தனை பேருக்கு வழங்கபடாமல் உள்ளது மற்றும் என்ன காரணத்தால் வழங்கபடாமல் உள்ளது என்பதை கண்டிப்பான முறையில் வரும் 04/08/2014 தேதிக்குள் NRHM அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என துணை இயக்குனர் அலுவலகங்களுக்கு ஆணை இடபட்டு உள்ளது.


மூன்று மாதங்களுகான ஊதிய தொகை அரசில் இருந்து விடுவிப்பு (ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்)

NRHM தொகுப்பூதிய செவிலியர்களுக்கு வரும் மூன்று மாதத்திற்கான (ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்) சம்பளம் அரசில் இருந்து விடுவிக்கபட்டு விட்டது. எனவே FUND வரவில்லை என கூற இயலாது.

MMU செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு பொருந்தும் என்ற ஆணை:

ஆணை கீழே பதிவேற்றம் செய்யபட்டு உள்ளது.


மேற்கண்ட அனைத்தையும் நாம் வெறுமனே சொன்னால் அலுவலகத்தில் ஏற்று கொள்ள மாட்டார்கள். எனவே செவிலிய சகோதரிகளின் நலனுக்காக மேலே சொன்ன அனைத்து விசயங்களின் அரசு ஆணை மற்றும் நகல்கள் இங்கு தரவேற்றம் செய்யபட்டு உள்ளது. இதனை தரவிறக்கம் செய்து அலுவலகத்தில் சமர்பிக்கவும்.

மேலே சொன்ன விசயங்களில் ஏதேனும் குழப்பம் தாங்கள் பணிபுரியும் நிலையத்தில் நிலவினால் தங்கள் குறைகளை செவிலிய புகார் பெட்டியில் பதிந்து விடவும். முடிந்த வரை உங்கள் குறைகளை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளபடும்.
 ரவி சீத்தாராமன்



தரவிறக்கம் செய்ய தலைப்பில் கிளிக் செய்யவும்



மூன்று மாதங்களுக்கு ஊதிய ஆணை:





 மாதம் மாதம் ஏழாம் தேதிக்குள் ஊதிய நகல் மற்றும் அரியர்ஸ்:





MMU செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு பொருந்தும் என்ற ஆணை:







No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.