Sunday, 24 August 2014

தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் (23-08-2014 - திருச்சி)

அன்பார்ந்த செவிலிய தோழமைகளுக்கு வணக்கம்,

நமது தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் 23-08-2014 அன்று, மாலை 2.00 மணியளவில்,   "மதுரம் ஹாலில்" NGGO HOME, ரெனால்ட்ஸ் ரோடு  திருச்சியில் நடைபெற்றது.



அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஒப்பந்த செவிலியர்கள் கலந்து கொண்டு கூட்டத்தினை சிறப்பு செயதனர்.

கூட்டத்தில் எடுத்துக் கொண்ட  விவாதங்கள்:-



தமிழக முதல்வருக்கு நன்றி
1) கடந்த சட்ட மன்ற கூட்டத்தொடரில் சுகாதார துறைக்கு 1) "அம்மா குழந்தை நல பெட்டகம்" 2} தாய் சேய் நல பிரிவுகளை மேன்மைமிகு மையங்களாக உயர்த்தியது 3) பல்வேறு புதிய வட்ட மருத்துவமனைகளை உருவாக்கியமைக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு  நன்றி தெரிவிக்கப்பட்டது.



செயற்குழு கூட்டம் இடமிருந்து வலம் 1) இரவி சீத்தாராமன், 2) உமாபதி, 3) கார்த்திகா, 4) கலைச்செல்வி, 5) முனீஸ்வரி.

2) சுகாதார துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் தீட்டினாலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் MCI, மற்றும் NABH மருத்துவமனைகளில் நோயாளிகளின் தேவைக்கு போதுமான செவிலியர்கள் இல்லை, மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தர பணி செவிலியர்கள் இல்லை என்பது விவாதிக்கப்பட்டது.



MCI & NABH குறைபாடுகள் பற்றியும், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியும்  இரவி சீத்தாராமன் விளக்குகிறார்
3) இந்திய அரசியலமைப்பு இந்திய குடிமக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை மறுக்கும் விதமாக ஒப்பந்த செவிலியர்கள் சங்க கூட்டத்திற்கு செல்வதை தேச துரோகம் போல சித்தரித்து, ஒப்பந்த செவிலியர்களின் மீது அடக்குமுறையை திணிக்கும் அதிகாரிகளுக்கும், செவிலியர்களை கூட்டத்திற்கு சென்றாலே SUSPEND மற்றும் TERMINATE செய்துவிடுவேன் என கூறும் அலுவலர்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.



செவிலியர்களின் அடிப்படை உரிமை மறுப்பு பற்றி இரமேஷ் பேசுகிறார்
4) நமது சங்கத்தின் கூட்டங்களை மாவட்டந்தோறும் நடத்தி உறுப்பினர்களை அனைவரையும் திரட்ட நடவடிக்கை எடுக்க உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் 2014 - 2015 வருடத்திற்கான உறுப்பினர் அட்டை  வழங்க நடவடிக்கை எடுக்க கோரப்பட்டது. விரைவில் உறுப்பினர் அட்டை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.



உறுப்பினர் சேர்க்கை, RCH/MMU/NCD பிரிவினை பற்றி பேசியபோது
 5) செவிலியர்கள் RCH - NCD - MMU   ஆகியோரிடையே மனக்கசப்பு மற்றும் ஒற்றுமையில்லை எனவும், இந்நிலை வளர்ந்து நமக்கு நாமே எதிரி ஆகிவிடக்கூடாது என கூறப்பட்டது.


6) தமிழக அரசின் சுகாதார துறையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பணி நிரந்தரம் என்று கூறி ஏமாற்றி செவிலியர்கள் சுரண்டப்படுவதை தடுக்க வேண்டும். 2 வருடத்திற்கு மேற்பட்ட காலத்தை பணிக்காலத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவாதிக்கப்பட்டது.



7) தமிழக முதல்வர் வழங்கிய 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்காமல் இல்லை என்று கூறிவதாக புகார் கூறப்பட்டது, இது அரசாணையை மீறும் செயலாகும் இது குறித்து அரசின் கவனத்திற்கு விரைவில் கொண்டு செல்லப்படும்.



8) நமது நடவடிக்கைகள் குறித்து நமது செவிலியர்களிடம் விழிப்புணர்வு இல்லை எனவும், கூட்டங்களுக்கு போக வேண்டாம் என நமது செவிலியர்களே தடுப்பதாகவும் கூறப்பட்டது. இது போன்ற செயல் வருந்த தக்கது. இப்போக்கினை மாற்றி கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது



9) தமிழக சுகாதார துறையில் செவிலியர்களின் ஊதியம் வேறு வேறாக உள்ளது (DME - 5500, DMS - 7000, DPH - 7700 + 500, REGULAR - 29710) . இதனை போக்கவும், நமது பணி நிரந்தரத்திற்கும், அரசின் கவனத்தை ஈர்க்கவும் திங்கள் முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.



10)

திருநெல்வேலி (கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள்) செயற்குழு விளக்க கருத்தரங்கம் நடத்துவது.

மதுரை (ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்கள்) செயற்குழு விளக்க கருத்தரங்கம் நடத்துவது.

கோயம்பத்தூர் (ஈரோடு, திருப்பூர், சத்தியமங்களம்,  ஆகிய மாவட்டங்கள்) செய்ற்குழு விளக்க கருத்தரங்கம் நடத்துவது.

என தீர்மானிக்கப்பட்டது.


கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:-

1. தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 4000 த்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த அடிப்படை செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

2.செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதை நிரந்தரமாக கைவிட வேண்டும்,

3. 24 மணி நேரமும் செயல்படும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குறைந்தபட்சம் 6 நிரந்தர செவிலியர்களை நியமிக்க வேண்டும். 

மேற்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்கட்டமாக வரும் 25-08-2014 முதல் 27-08-2014 வரை அனைத்து செவிலியர்களும் கருப்பு பட்டை (BLACK BATCH) அணிந்து பணிபுரிய உள்ளோம்.

-- இவண்
-- தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம்.

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.