Sunday, 10 August 2014

2007 பேட்ச் ஏமாற்றபட்டது எப்படி? செவிலிய சகோதரிகளின் அறியாமை ? நாங்கள் என்ன செய்தோம், நாம் என்ன செய்ய போகிறோம்


காசு கொடுத்தால் தான் ரெகுலர் வருகிறது என்று நமது தொகுப்பூதிய செவிலியர்கள் நினைத்து கொண்டு உள்ளனர். இது முற்றிலும் 100/100 சதவிதம் தவறு. தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் பெரும்பாலனோர் இதை தெரிவிகின்றனர். 

ஒரு சிறு விளக்கம் நீங்கள் நினைப்பது நினைக்க இருப்பது எல்லாவற்றையும் நாங்கள் அறிவோம், எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளபட்டு விட்டது.

தொடர்ந்து முயற்சி என்ற கல்லெறிந்து பார்ப்பது நமது பணி எந்த கல்லில் பணி நிரந்தரம் என்ற பழம் விழும் என்பது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.


STRIKE பண்ணினால் மெயில் வரும் யார்க்கும் லீவ் தரக்கூடாது, மீறினால் பணி நீக்கம் செய்ய படுவிர்கள் என்று. அதனால நமது செவிலிய சகோதரிகள் பயபடுவர்கள். 

நமது சகோதரிகளும் பாவம் ஆறாவது வருடம் பணி புரிவது பணி நீக்கம் செய்ய படுவதற்கா, பெண் செவிலியர்கள் ஆண் செவிலியர்களை போல அல்ல அவர்கள் கணவர், தந்தை, குழந்தை, மாமன் மச்சான்  போன்ற பல பேரின் அனுமதி இருந்தால் மட்டுமே அவர்கள் அடுத்த அடி எடுத்த வைக்க இயலும் ஆனால் இந்த மாத இறுதியில் ஒரு வேறு விதமான ஒரு தெளிவான முடிவெடுக்கபடும். இதுவரை யாரும் அந்த வழியை கையாண்டது இல்லை. நீங்கள் அனைவரும் உங்கள் விருப்படி ஊசி போட்டுக்கொண்டே சப்போர்ட் செய்தால் போதும். 


நடப்பது என்ன ? அரசு ஆணை 230 படி

தொகுப்பூதிய செவிலியர்களை எவ்வாறு பணி நிரந்தரம் செய்யபடுகிறார்கள் என்றால் நிரந்தர செவிலிய பணி இடங்களில் காலி பணி இடம் ஏற்படும் போது அதாவது நிரந்தர செவிலியர் ஒருவர் வயது மூப்பின் காரணமாக பணி ஓய்வு பெற்றாலோ அல்லது ஹெட் நர்சாக பதிவி உயர்வு பெற்றாலோ மட்டுமே நாம் பணி நிரந்தரம் பெறுகிறோம்.

இதை தான் அரசு ஆணை 232 இல் தெரிவிக்கபட்டு உள்ளது. AS PER EXISTING VACANCY CONTRACT STAFF NURSES WILL GET REGULAR.

2008 பேட்ச் சேர்ந்த நாம் அரசின் இந்த நடைமுறைபடி நாம் பணி நிரந்தரம் பெற வேண்டுமென்றால் குறைந்தது இன்னும் ஒன்றரை வருடதிற்கு மேல் ஆகும்.


2007 பேட்ச் ஏமாற்றபட்டது எப்படி? 


ஆனால் இது புரியாமல் 2007 பேட்ச் சகோதரிகள் 5000 ரூபாய் கொடுத்ததால் ரெகுலர் வரும் என்று நினைத்தனர். அப்படி என்றால் இன்னும் 160 பேர் வெளியே இருக்க காரணம் என்ன ? 5000 கொடுத்து ஒரு வருடம் ஆகி விட்டது ரெகுலர் வந்திருக்க வேண்டுமே
காரணம் இந்த வரும் இன்னும் 40 மேற்பட்ட செவிலியர்கள் ஹெட் நர்சாக பதவி உயர்வு பெற வேண்டியுள்ளது. அவர்கள் ஆனால் தான் இந்த இவர்கள் உள்ளே செல்ல முடியும். இது தெரியாமல் உடன் படித்தவர்களாயே ஏமாற்றபட்டார்கள் கோடிகளை சம்பாரித்த ஒருவருக்கு இன்னும் சில கோடிகளை சேர்க்கஇந்த கொள்ளையில் அரசிற்கோ அல்லது அதிகாரிகளுக்கோ எந்த சமந்தமும் கிடையாது இது முழுக்க நமது துறையை சார்ந்தவர்கள் அடித்த கொள்ளை(இதை இப்போது இங்கு தெரிவிக்க காரணம் 2008 பேட்சில் உள்ள சில அல்லகைகள் இந்த வேலையை இப்போது ஆரம்பித்து உள்ளனர்.)


நாம் முயற்சி செய்வது எதற்காக என்றால் புதிதாக பணி இடங்களை உருவாக்க அதாவது ஒவ்வொரு மருத்துவமனையிலும், ஆரம்ப சுகாதார நிலையத்திலும், மருத்துவகல்லுரி மருத்துவமனைகளிலும் புதிய பணி இடங்கள் உருவாக்கபட வேண்டும். அவ்வாறு உருவாக்கினால் மட்டுமே உடனே பணி நிரந்தரம் பெற முடியும்.நமது பேட்சை சேர்ந்த சில அல்லைகைகள் நிரந்தர செவிலிய தலைவர் மரியாதைக்குரிய லீலாவதி அவர்களின் பெயரை சொல்லிக்கொண்டு பணம் வசூல் பண்ண திட்டம் தீட்டி உள்ளனர்.
அவ்வாறு நீங்கள் பணம் அளிப்பதால் சத்தியமாக ரெகுலர் வாராது.

நாம் ஏற்கனேவே தெரிவித்தவாறு அதற்கு வேறுவிதமான செயல்களை செய்ய வேண்டியுள்ளது. அவைகள் இந்த மாத இறுதிக்குள் தங்களுக்கு தெரிவிக்கபடும்.

அப்படி அவர்கள் மரியாதைக்குரிய லீலாவதி அவர்களின் பெயரை பயன்படுத்தி உங்களிடம் பணம் வசூல் செய்து விட்டால் இரவும் பகலும் இத்தனை நாள் நாங்கள் உங்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வுகு உழைத்த உழைப்புக்கும் அர்த்தமே இல்லாமல் போய்விடும்.

இத்தனை நாள் உழைத்தும் ஒன்றும் நடக்க வில்லையே என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. கீழே இருப்பதை பாருங்கள். முயற்சி செய்ததன் விளைவு தான் இது

ஆரம்ப சுகாதார பணி இடங்களுக்கான கருத்துரு:


ஆனால் அது அவ்வாறல்ல இதற்கு முன்னர் இருந்த பல அதிகாரிகள் கிராமபுறங்களில் PHC யில் நிரந்தர செவிலியர் பணி இடங்களை உருவாக்க முடியாது டாக்டர், ANM, மருந்தாளுனர், மற்றும் அலுவலக ஊழியர்களை மட்டுமே நிரந்தர பணியில் நியமிக்க இயலும், செவிலியர்கள் எங்களுக்கு கிடைத்த சிறந்த அடிமைகள் என்ற கொள்கையை கொண்டு இருந்தனர்,ஏனெனில் அவர்கள் வீட்டில் கண்டிப்பாக யாரும் செவிலியம் படித்து இருக்க மாட்டார்கள். வேண்டுமென்றால் டாக்டர் படிக்க வைத்து இருப்பார்கள், அதனால் நாம் படும் சிரமங்களை அவர்கள் புரிந்து கொள்ள அவசியம் இல்லை.

ஆனால் மரியாதைக்குரிய மக்கள் நல்வாழ்வு துறை செயலர் திரு.ராதகிருஷ்ணன் சார் அவர்களை பலமுறை சந்தித்து நாம் நம் குறைகளையும் தெரிவித்து இருக்கிறோம்.

அதன் விளைவாக மூன்றுக்கும் மேற்பட்ட முறைகளில் செவிலியர்களை நிரந்தரம் செய்யலாம் என்று மக்கள் நல்வாழ்வு துறை மூலம் கருத்துரு நிதி துறைக்கு அனுப்பபட்டது.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள 4614 தொகுப்பூதிய பணி இடங்கள் அனைத்து நிரந்தர பணி இடங்கலாக மாற்றுவது 
 
அல்லது

ஐந்து அல்லது நான்கு வருடம் முடித்த அனைத்து செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்வது
 
அல்லது

கிராமப்புறங்களில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு நிரந்தர செவிலியர்  (1600 மேற்பட்ட PHC இல்)

அல்லது

நான்கு அல்லது ஐந்து வருடம் முடித்து விட்டாலே பணி நிரந்தரம் பெரும் வரை 20000 ஊதியம் என்று.

ஆனால் எதிர்பாராத விதமாக பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் இதற்கு ஒரு தெளிவு பிறக்கவில்லை.

இதில் இன்னும் ஒரு சிக்கல் என்னவென்றால் மக்கள் நல்வாழ்வு துறையை சார்ந்த அனைவரும் நமக்காக மிகவும் கஷ்டபட்டு கோரிக்கைகளை நம்மளை சிறப்பாக எடுத்து வைத்தும் நிதி துறை ஒத்துகொள்ளாமல் இழுத்து அடித்து வருகிறது.

நாம் எதாவது செய்தாலும் நமது துறையை சார்ந்த நமது அதிகாரிகளுக்கு தான் தலைவலி. நமக்கு நல்லது செய்ய நெனைக்கு அதிகாரிகளுக்கு எவ்வாறு தலைவலி ஏற்பட்டது என்ற எண்ணம் ஓரு பக்கம்.

இருப்பினும் நாம் இறுதி கட்டத்தில் உள்ளோம். இந்த மாத இறுதிக்குள் ஒரு முடிவு எடுத்து அதை முன்னெடுத்து செல்லலாம் என்று இருக்கிறோம் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமால், எங்கள் மேல் நம்பிகை இருந்தால் மட்டும் எங்களுக்கு ஒத்துழைப்பு அளியுங்கள். 

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.