Sunday, 6 July 2014

கவிதை


எங்கள் துறை எந்த தேவதையாலும் ஆசீர்வதிக்கப்படவில்லை
ஆனால் எல்லாச் சாத்தான்களாலும்
இஷ்டம் போலச் சபிக்கப்பட்டிருக்கின்றோம்.

எந்த பூங்காற்றும் எங்களை வருடியதில்லை
ஆனால் எல்லா புயல்கலோடும் நாங்கள் போராடியிருக்கிறோம்.

மகிழ்ச்சி மலர்களை எங்களால் பறிக்க முடியவில்லை
எங்கள் தோட்டத்தில் மலர்வதேல்லாம் கண்ணீர் பூக்களாகவே காட்சி அளிக்கின்றன.

நாங்கள் கண்விழிப்பது காலை சூரியனின் முகத்தில் அல்ல
கண்ணீருடன் நிற்கும் நோயாளிகளின் முகத்தில் தான்

வருமானம் ஈட்டி தர இயலாத சேவை என்ற காரணத்தாலோ என்னவோ எங்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை

ஆனாலும் எங்கள் பயணம் பழுதுபடவில்லை.

வெள்ளை உடை தரித்துகொண்டு சோக சிலுவைகளை நெஞ்சில் சுமந்து கொண்டு

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.