Thursday, 17 July 2014

மதுரை மாநகராட்சி செவிலியர்கள் பணியிடை நீக்கத்துக்கு கோர்ட் தடை


எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை




எல்லாரும் எல்லாரையும் போல இருக்கனும்னு நினைக்குறது தப்பா,

எல்லாரும் பிச்சை எடுத்தா நாமலும் பிச்சை எடுக்கலாம், கூட வேலை பாக்குறவங்க, வேற டிபார்ட்மென்ட்ல வேலை பாக்குறவங்க எல்லாம் இந்த கார வித்துட்டு அந்த கார் வாங்கலாமானு அங்க இடம் இருக்கு இங்க இடம் இருக்கு வாங்கி போடாமலானு பேசுறாங்க, ஏன் பேசுறாங்க, மனி அங்க குவியுது. எல்லாருக்கும் எல்லாம் சமமா இருந்தா தானே சிறப்பா இருக்கும்

நமக்கு அன்றாடம் லைப் ஓட்டுறது சிரமமா இருக்கு, 8 ரூபா சம்பளத 10 ரூபா ஆக்க எவ்வளவு அக்கபோரு

சென்னை MMC, STANLY செவிலியர்கள் சம்பளத்தை 5500 இருந்து 8000 ஆக்க இரண்டு வருடமாக முயற்சி நடகிறது. நம்மளும் எத்தனை தடவை நடையா நடக்கிறது.

ஆனா 80 ரூபா சம்பளத ஈஸியா 100 ரூபா ஆகிறாங்க

எல்லாரும் இந்த பூமில தான் சாமி வாழுறோம்,

நம்ம எதாவது கேட்டா நாம எதோ எதிரா செயல்படுறத மாதிரி பாக்குறது எவ்வளவு கொடுமை,

மல்லாக படுத்துடு யோசித்து பார்த்த எது நியாயம்னு மனசே சொல்லும்

பழையது:

தொகுப்பூதியத்தில் பணியாற்றிய மாநகராட்சி செவிலியர்கள் 21 பேர் பணி நீக்கம்

புதியது:
மதுரை மாநகராட்சி செவிலியர்கள் பணியிடை நீக்கத்துக்கு கோர்ட் தடை

மதுரை, ஜூலை. 6–

மதுரை மாநகராட்சி சுகாதார பிரிவில் கடந்த 2001–ம் ஆண்டு செவிலியர்கள், மருந்தாளுனர்கள் என 21 பேர் தொகுப்பூதிய முறையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். அவர்கள் 2007–ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து அவர்கள் ஐகோர்ட்டில் தடை ஆணை பெற்று தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த 21 பேரையும் பணி நிரந்தரம் செய்வதற்கான பரிந்துரையை மாநக ராட்சி நிர்வாகம் அரசுக்கு அனுப்பியது. தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த 21 பேரின் பரிந்துரையை அரசு நிராகரித்தது.

மேலும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமனம் செய்யப்படாததால் அவர் களுக்கு காலமுறை ஊதியமும் வழங்க இயலாது என்றும், அவர்களை பணி நீக்கம் செய்யவும் அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து 21 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

பணி நீக்கம் செய்யப்பட்ட 21 பேரும் மதுரை மாநக ராட்சி ஆணையர் கதிரவனை சந்தித்து தங்களுக்கு மீண்டும் பணி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். பணி நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டு இருப்பதால் எதுவும் செய்ய முடியாது என அவர் கூறினார். இதை தொடர்ந்து அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.