Thursday, 17 July 2014

175 அரசு எம்பிபிஎஸ் இடங்களுக்கு எம்சிஐ அனுமதி: மருத்துவ கல்வி இயக்குனர் தகவல்


உயர்திரு மருத்துவ கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து தொகுப்பூதிய செவிலியர்களின் நியாமான கோரிக்கைகளையும் அந்த கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கான முகாந்திரத்தையும் அதற்கான அதிகாரபூர்வ தகவல்களையும் அளித்து உள்ளோம். ஆனால்

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????





தமிழ்நாட்டில் உள்ள 19 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் பி.டி.எஸ். இடங்களுக்கு கடந்த மாதம் 23–ந் தேதி முதல் கட்ட கலந்தாய்வு நடந்தது.

இதில் சுமார் 2000 இடங்கள் நிரம்பின. அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்பட்டன.

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள், திருச்சி மருத்துவ கல்லூரியில் 50 இடங்கள், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் 25 இடங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சிலில் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

அந்த 3 அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 175 எம்.பி.பி.எஸ். இடங்களை பெறுவதில் மருத்துவ கல்வி இயக்ககம் தீவிர முயற்சி மேற்கொண்டது.

எம்.சி.ஐ. குறிப்பிட்ட குறைபாடுகளை சரி செய்து அந்த இடங்களை பெறுவதில் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. நிறுத்தி வைத்திருந்த 175 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கும் எம்.சி.ஐ. அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து 2–வது கட்ட மருத்துவ கலந்தாய்வு வருகிற 21–ந் தேதி தொடங்கி 26–ந் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர். கீதாலட்சுமி 

மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:
திருவாரூர், திருச்சி, சேலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் 175 எம்.பி.பி.எஸ். இடத்திற்கு எம்.சி.ஐ. அனுமதி அளித்துள்ளது. மருத்துவ கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ளது.
கடந்த 2 ஆண்டில் மட்டும் 240 கோடி நிதி ஒதுக்கி பின்பு மருத்துவ கல்லூரிகளுக்கு தேவையான வசதிகளை செய்துள்ளது. புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு ரூ.20 கோடி முதல்அமைச்சர் நிதி ஒதுக்கியதன் மூலம் அனுமதி கிடைத்துள்ளது.

மருத்துவ சேவையை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு அதிகளவு நிதி ஒதுக்கி வருகிறது. இதனால் இரண்டாவது கட்ட கலந்தாய்வு 21–ந் தேதி தொடங்கி 26–ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த கலந்தாய்வில் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 175 இடங்கள், கே.கே. நகர் சி.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் 65 இடங்கள், மேலும் 

முதல் கட்ட கலந்தாய்வில் தனியார் மருத்துவ கல்லூரிகளை தேர்வு செய்த 25 பேர் பொறியியல் படிப்பில் சேர்ந்ததால் அதனால் ஏற்பட்ட காலி இடங்களும் 2–வது கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும்.

இது தவிர தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் இதில் நிரப்பப்படும்.
இவ்வாறு டாக்டர் கீதாலட்சுமி கூறினார்.

No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.