Friday, 27 June 2014

மதுரை துணை இயக்குனர் அலுவலக RTI தகவல்கள்



கடந்த மாதம் தேனி மாவட்டம் உட்பட திருவண்ணாமலை, சேலம், மதுரை, கன்னியாகுமரி, மற்றும் நாகைபட்டினம் மாவட்டங்களுக்கு கீழ்க்கண்ட தகவல்களை கோரி தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்பம் மூலம் விண்ணப்பித்து இருந்தோம். 





மதுரை துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனுப்பபட்ட பதில்கள் இங்கு தரப்பட்டு உள்ளது. மதுரை மாவட்ட சகோதரிகள் தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் பணி நேரம் மற்றும் ஊதிய பிரச்னை சமந்தமாக ஏதேனும் குழப்பம் நேரும் பட்சத்தில் கீழ்காணும் நகலை உபயோகித்து பயன் பெறவும். 




சிறப்பான முறையில் பொறுப்பான தகவல் அளித்த பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

இதனை டவுன்லோட் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்






ஐயா வணக்கம்
பொது தகவல் அறியும் உரிமை சட்டம் 2005ன் கீழ், எனக்கு கீழ்காணும் தகவல்களை அளிக்க கேட்டு கொள்கிறேன்.

1.        மதுரை துணை இயக்குனர் அலுவலகத்தில் மின்னச்சல் முகவரியான dphslm@tn.nic.in பயன்பாட்டில் உள்ளதா என்ற தகவல்

2.        கடந்த ஏப்ரல் மாதம் 17 தேதி NRHM அலுவலகத்தில் இருந்து கூடுதல் இயக்குனர் அவர்களால் additionalnrhm@gmail.com என்ற மின்னச்சல் முகவரியில் இருந்து SALARY OF CONTRACTUAL STAFF NURSES என்ற தலைப்பில் ஐந்தாம் வருடம் ஆறாம் வருடம் பணி புரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு அதற்கு ஏற்ப ஊதியம் அளிக்க வேண்டும் என்ற விளக்கமும் மற்றும் MMU செவிலியர்களுக்கு அரசு ஆணை 312 பொருந்தும் என்றும் தங்கள் அலுவலகத்தின் dphslm@tn.nic.in என்ற முகவரிக்கு அனுப்ப பட்ட மின்னஞ்சல் தங்கள் கட்டுபாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் தங்கள் அலுவலகத்தில் இருந்து எந்த தேதியில் அனுப்பபட்டது என்ற தகவல்


3.        மதுரை துணை இயக்குனர் கட்டுபாட்டின் கீழ் வரும்
அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையயங்களில்  2013 ஆம் ஆண்டு வந்த அரசு ஆணை எண் 342 படி RCH SCHEME இன் கீழ் மூன்றாம் ஆண்டு பணி புரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு 8 மணி நேர பணிக்கான ஊதியம் எவ்வளவு என்ற தகவல்

4.        மதுரை துணை இயக்குனர் கட்டுபாட்டின் கீழ் வரும்
அரசு ஆரம்ப சுகாதார நிலையயங்களில்  2014 ஆம் ஆண்டு வந்த அரசு ஆணை எண் 312 படி RCH SCHEME இன் கீழ் ஐந்தாம் ஆண்டு பணி புரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு 8 மணி நேர பணிக்கான ஊதியம் எவ்வளவு என்ற தகவல்

5.        மதுரை துணை இயக்குனர் கட்டுபாட்டின் கீழ் வரும்
அரசு ஆரம்ப சுகாதார நிலையயங்களில்  2014 ஆம் ஆண்டு வந்த அரசு ஆணை எண் 312 படி RCH SCHEME இன் கீழ் ஐந்தாம் ஆண்டு பணி புரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு NRHM RURAL அலவன்சு எவ்வளவு என்ற தகவல்

6.        மதுரை துணை இயக்குனர் கட்டுபாட்டின் கீழ் வரும் அனைத்து
அரசு ஆரம்ப சுகாதார நிலையயங்களில்  2014 ஆம் ஆண்டு வந்த அரசு ஆணை எண் 312 படி RCH SCHEME மற்றும் MMU தொகுப்பூதிய செவிலியர்களுக்கு 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2014 மார்ச் வரை ஊதிய நிலுவை வழங்க பட்டு விட்டதா என்ற தகவல் ? வழங்கபட வில்லை எனில் அதற்கான காரணம் என்ன என்ற தகவல் ?

7.        மதுரை துணை இயக்குனர் கட்டுபாட்டின் கீழ் வரும்
செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையயங்களில் 2014 ஆம் ஆண்டு வந்த அரசு ஆணை எண் 312 படி RCH SCHEME மற்றும் MMU தொகுப்பூதிய செவிலியர்களுக்கு 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2014 மார்ச் வரை ஊதிய நிலுவை வழங்க பட்டு விட்டதா என்ற தகவல் ? வழங்கபட வில்லை எனில் அதற்கான காரணம் என்ன என்ற தகவல் ?

8.        மதுரை துணை இயக்குனர் கட்டுபாட்டின் கீழ் வரும் அனைத்து
அரசு ஆரம்ப சுகாதார நிலையயங்களில்  2014 ஆம் ஆண்டு வந்த அரசு ஆணை எண் 312 படி RCH SCHEME மற்றும் MMU ஆகிய திட்டங்களில் ஆறாம் வருடம் பணி புரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் ஊதியமாக அதிகபட்சம் 9200 இம் NRHM அலவன்சாக அதிகபட்சம் 650 மட்டுமே தான் வழங்கபடுமா என்ற தகவல்

9.        மதுரை துணை இயக்குனர் கட்டுபாட்டின் கீழ் வரும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 2013 ஆம் ஆண்டு வந்த அரசு ஆணை எண் 342 படி 2012 ஆண்டு ஏப்ரல் முதல் 2014 மார்ச் வரை தொகுப்பூதிய செவிலியர்கள் கூடுதலாக பார்க்கும் 4 மணி நேரபணிக்கு (12 மணி நேர பணிக்கு) மாதத்திற்கு ரூபாய் 1000 அல்லது ஒரு நாள் ஒன்றிற்கு கூடுதலாக பார்க்கும் 4 மணி நேரத்திற்கு ரூபாய் 100 அதிகபட்சம் 7 நாட்களுக்கு 700 என்ற தொகை வழங்கபடுகிறதா என்ற என்ற தகவல்

10.     தங்கள் கட்டுபாட்டின் கீழ் இயங்கும் செல்லம்பட்டி ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் RCH  தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரும் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் PHC யில் இரண்டு RCH தொகுப்பூதிய செவிலியர் மட்டும் பணியில் இருந்த மாதங்களில் அந்த இரண்டு தொகுப்பூதிய செவிலியர்களும் 8 மணி நேரம் மட்டுமே பணிபுரிகிதார்களா அல்லது 12 மணி நேரம் பணி புரிந்தார்களா என்ற தகவல்

11.     தங்கள் கட்டுபாட்டின் கீழ் இயங்கும் செல்லம்பட்டி ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அரசு ஆணை 342 படி கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் செவிலியர்கள் பார்த்த 12 மணி நேரபணிக்கான எக்ஸ்ட்ரா டுட்டி அலவன்சு வழங்கபடுகிறதா என்ற தகவல்


12.     அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இவ்வாறு பணியாளர் செய்த வேலைக்கு சரியாக ஊதியம் பெற்று தராமல் அலுவலக ஊழியர்கள் கடமையில் இருந்து இருந்து தவறி இருந்தால் அவர்கள் மேல் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க படுமா என்ற தகவல்

13.     ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள தொகுப்பூதிய செவிலியர்களின் பணி நேரத்தையும், அவர்களின் ஊதியத்தை கண்காணிப்பது யாருடைய பணி என்ற தகவல்

14.     ANM இல்லாத ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையயத்தில் உள்ள இரண்டு தொகுப்பூதிய செவிலியர்களில் ஒரு செவிலியர் விடுப்பில் உள்ளபோது மற்றொரு செவிலியர் 12 மணி நேரம் மட்டும் பணி புரிந்தால் போதுமா அல்லது 24 மணி நேரம் தொடர்ந்து பணியில் இருக்க வேண்டுமா என்ற தகவல்


15.     ஒரு வேளை ஒரு செவிலியர் விடுப்பில் உள்ளபோது அத்தியாவசிய பணி என்ற காரணத்தால் அடுத்த செவிலியர் தொடர்ந்து 24 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்று அரசு ஆணையை உள்ளதா என்ற தகவல்

16.     இருந்தால் அந்த ஆணையின் நகலை தருக

17.     அப்படி 12 மணிநேரத்தை தவிர்த்து கூடுதலாக 12 மணி நேரம் அதாவது தொடர்ந்து 24 மணி நேரம் பணி புரிந்தால் அதற்கு பணபயன் ஏதேனும் வழங்கபடுகிறதா என்ற தகவல்

18.     பணி நேரமாகிய 12 மணி நேரத்தை தவிர்த்து அடுத்த 12 மணி நேரம் (24 மணி நேரம்) பிரசவம் பார்க்க கால் டுட்டி என்று அழைப்பு வந்தால் மட்டும் பணிக்கு வந்தால் போதுமா இல்லை அன்றாட மருத்துவமனை பணிகளை மேற்கொள்ளவே பணியில் தொடர்ந்து இருக்க வேண்டுமா என்ற தகவல்


19.     அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  பணி புரியும் மருத்துவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து எத்தனை கிலோமீட்டர் தொலைவில் வசிக்கவேண்டும் என்ற தகவல்

20.     இரவு நேரங்களில் வரும் பிரசவ கேஸ்களை பார்க்க செவிலியர் மருத்துவரை அழைக்கலாமா என்ற தகவல்

21.     இரண்டு RCH செவிலியர்கள் மட்டுமே பணி புரிந்தால் அவர்களுக்கு வார விடுப்பு உண்டா என்ற தகவல்

22.     உண்டு என்றால் மாதத்திற்கு எத்தனை விடுப்பு என்ற தகவல்

23.     ANM இல்லாத நிலையங்களில் இரண்டு தொகுப்பூதிய செவிலியர்கள் மட்டுமே பணியில் இருக்கும் போது ஒரு செவிலியர் விடுப்பில் இருந்தால் மற்றொரு செவிலியர் எவ்வளவு நேரம் பணி புரியவேண்டும் என்ற தகவல்


24.     ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு தொகுப்பூதிய செவிலியர்கள் ஒரு நிரந்தர செவிலியர் இருந்தால் ஒவ்வொருவரும் எவ்வளவு நேரம் பணி புரிய வேண்டும் என்ற தகவல்

25.     அந்த மூன்று பேருக்கும் பணி நேரம் என்ன என்ற தகவலை தனிதனியாக தரவும் (SHIFT TIMINGS-பணிக்கு வரவேண்டிய நேரம்/பணியை விட்டு செல்ல வேண்டிய நேரம்)

26.     அந்த மூன்று பேருக்கும் நிரந்தம் தொகுப்பூதியம் என்ற வேறுபாடு இல்லாமல் சுழற்சி முறையில் அதாவது காலை மதியம் இரவு என்று சுழற்சி முறையில் பணி புரிய வேண்டுமா அல்லது நிரந்தர செவிலியருக்கு என்ற தனியாக ஷிப்ட் உள்ளதா என்ற தகவல்

27.     இரண்டு தொகுப்பூதிய செவிலியர் ஒரு நிரந்தர செவிலியர் பணியில் இருக்கும் போது ஒவ்வொரு தொகுப்பூதிய செவிலியரும் 12  மணி நேரம் தான் பணிபுரிய வேண்டும் என்பது தான் அரசு ஆணையா என்ற தகவல்

28.     அரசு ஆணை 342 படி தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நேரத்தை கணக்கிட்டு ஊதியம் வழங்க ஏதுவாக வருகை பதிவேட்டில் அவர்கள் பணிக்கு வரும் நேரம் பணியை விட்டு செல்லும் நேரம் குறிக்கபடுகிறதா என்ற தகவல்

29.     குறிக்கபடவில்லை எனில் அவர்கள் எந்த எந்த மாதம் எத்தனை நாட்கள் 12 மணிநேரம் புரிந்தார்கள் என்பது எதை வைத்து தீர்மானிக்கபடுகிரது என்ற தகவல


No comments:

Post a Comment

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.