சென்னை: ஒழுங்கு
நடவடிக்கைக்கான விசாரணைக்கு ஆஜராகும்படி, ஐந்து டாக்டர்களுக்கு, இந்திய மருத்துவக்
கவுன்சில் அனுப்பிய, 'நோட்டீஸ்' தொடர்பான
நடவடிக்கைகளுக்கு, சென்னை
உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
கையெழுத்து
ஈரோடு
மாவட்டம், பவானியைச்
சேர்ந்த, டாக்டர்
லோகநாதன் என்பவர் தாக்கல் செய்த மனு:
பவானியில், 'ஆர்தோ' டாக்டராக
பணியாற்றுகிறேன். புதுச்சேரியில் உள்ள லட்சுமி நாராயண் மருத்துவ அறிவியல்
நிறுவனத்தில், உதவிப்
பேராசிரியராக, 2010 ஜனவரியில் சேர்ந்தேன்.
இந்திய மருத்துவக் கவுன்சிலின் குழு, அதே ஆண்டு ஜனவரி,
28ல், கல்லுாரியை ஆய்வு
செய்தது. அப்போது, நானும், அங்கு இருந்தேன்.
என்னிடம், கையெழுத்து
பெற்றனர்.
பணி
நிரந்தரம் செய்யப் படாததால், உதவிப் பேராசிரியர்
பணியில் இருந்து விலகினேன்.
இந்திய மருத்துவக் கவுன்சிலின் குழு, சில முறைகேடுகள்
செய்ததாக கூறி, என்னிடம்,
2011 அக்டோபரில், சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. சில
கையெழுத்துகள் என்னுடையது தானா என, சரி பார்த்தனர்.
இந்நிலையில், 'ஏன் ஒழுங்கு நடவடிக்கை
எடுக்கக் கூடாது?' என கேட்டு, இந்திய மருத்துவக்
கவுன்சில், கடந்த, மே மாதம், 'நோட்டீஸ்' அனுப்பியது. குழு முன்
ஆஜராகவும், கூறியிருந்தது.
கல்லுாரியின் வருகைப் பதிவேட்டில் என் பெயர் இல்லை
என்றும், ஆய்வின்
போது கலந்து கொண்டதற்காக, கல்லுாரி
யின் ரசீதில் கையெழுத்து பெறப்பட்டு, ரொக்கப்பணம்
வழங்கப்பட்டதாகவும், நோட்டீசில்
கூறப்பட்டுள்ளது.
என் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மைஇல்லை. நான், ரொக்கமாகவோ, டி.டி.,யாகவோ, பணம் பெறவில்லை. எனவே, இந்திய மருத்துவக்
கவுன்சிலின், 'நோட்டீஸ்' தொடர்பான
நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்; அதை, ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று, மேலும், நான்கு டாக்டர்கள், மனுக்கள் தாக்கல்
செய்தனர். இம்மனுக்கள், நீதிபதி
நாகமுத்து முன், விசாரணைக்கு
வந்தன. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்
முத்து குமார சாமி, வழக்கறிஞர்
நீலகண்டன் ஆஜராகினர்.
ஒழுங்கு நடவடிக்கை
மனுதாரர்கள்
சார்பில், மூத்த
வழக்கறிஞர், முத்து
குமாரசாமி வாதாடியதாவது: ஒரு டாக்டருக்கு எதிராக, இந்திய மருத்துவக்
கவுன்சிலுக்கு புகார் வந்தால், அதை, மாநில கவுன்சிலுக்கு
அனுப்ப வேண்டும். மாநில கவுன்சில் தான் விசாரணை நடத்தி, ஒழுங்கு நடவடிக்கை
எடுக்க முடியும்.
அதை எதிர்த்து, அகில இந்திய மருத் துவக் கவுன்சிலிடம், மேல்முறையீடு செய்யலாம். விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க, அகில இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரமில்லை.
இவ்வாறு, அவர் வாதாடினார்.
இதையடுத்து, இந்திய
மருத்துவக் கவுன்சிலின் நடவடிக்கைக்கு, இம்மாதம்,
23ம்
தேதி வரை, இடைக்கால
தடை விதித்து, நீதிபதி
நாகமுத்து உத்தரவிட்டார்
No comments:
Post a Comment
தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.