Sunday, 18 May 2014

பணி நிரந்தரம் எப்பொழுது வரும், எப்படி வரும்?








பெரும்பாலான செவிலியர்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் போது நமக்கு எப்போ ரெகுலர், இந்த வருசத்துக்குள்ள வருமா, முன்னாடி எல்லாம் ஒரு மாசத்துக்கு 200 பேரா போட்டுடு இருந்தாங்க, என்று குழப்பி கொள்கின்றனர்.

 

இப்போது உள்ள நிலைமைபடி தொகுப்பூதிய செவிலியர்கள் எவ்வாறு பணி நிரந்தரம் செய்யபடுகின்றனர் என்றால் இருக்கிற நிரந்தர காலி பணி இடங்களை பொறுத்து அதாவது,

 

ஒரு மருத்துவமனையில் 50 செவிலியர்கள் பணி புரிகின்றனர் என்றால் அதில் ஒரு ஐந்து செவிலியர்கள் ஹெட்நர்ஸ் ஆகவும் இன்னும் ஒரு ஐந்து பேர் பணி ஓய்வும் பெற்று விட்டால் மொத்தத்தில் 10 நிரந்தர பணி இடங்கள் காலி.

 

அந்த பத்து நிரந்தர பணி இடங்களுக்கு தொகுபூதியதில் பணி புரியும் செவிலியர்கள் நிரந்தர செவிலியர்பணி இடங்களுக்கு ஈர்க்கபடுவார்கள்.

 

அதே போல் ஓமந்தூர் போன்ற மருத்துவமனைகள் மற்றும் சில புதிய திட்டங்களுக்கு நிரந்தர பணி இடங்களுக்கு உருவாக்கபட்டால் அதாவது சமீபத்தில் செவிலியர்களுக்கு ட்ரைனிங் தருவதற்காக உருவாக்கபட்ட 192 நிரந்தர பணி தொகுபூதிய செவிலியர்கள் ஈர்க்கபடுவார்கள். ஈர்க்கபட்டார்கள்..

 

இதே போல் தமிழகம் முழுவதும் ஏற்படும் காலி பணி இடங்கள் நிரப்பபடுகின்றன.

 

இந்த வருடம் அதாவது 2014 வருடம் ஹெட்நர்ஸ் ஆக பதவி உயர்வு பெற இருக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 225. ஏற்கனவே இந்த வருடம் பணி ஓய்வு பெற்ற நபர்களின் எண்ணிக்கை ஒரு 200 தாண்டும். இந்த எண்ணிக்கை 2008 பணியில் இணைந்த செவிலியர்களை நிரந்தரபடுத்தவே போய்விடும்

 

ஆகமொத்தம் கூட்டி கழித்து பார்த்தல் 2008 பணியில் இணைந்த செவிலியர்கள் மீதம் 500 மேற்பட்டோர் உள்ளனர். அவர்களுக்கு விரைவில் கவுன்சிலிங் வர வாய்ப்பு உள்ளது.

 

2009 பணியில் இணைந்த 1600 மேற்பட்ட செவிலியர்களுக்கு இந்த வருடம் பணி நிரந்தரம் வரவேண்டுமென்றால் இந்த வருடம் 1600 மேற்பட்ட செவிலியர்கள் பணி ஓய்வு பெறவேண்டும்.

 

எனவே தான் நாம் அரசிடமும் அதிகாரிகளிடமும் என்ன மாதிரியான முயற்சிகளையும், கோரிக்கைகளையும் முன்னெடுகிறோம் என்றால் புதிய நிரந்த பணி இடங்களை உருவாங்கள் என்பது தான். அதாவது ஒரு மருத்துவமனையில் 50 நிரந்தர செவிலியர்கள் பணி புரிகிறார்கள் என்றால் அதை 60 நிரந்தர செவிலியர்களாக மாற்றி கூடுதலாக பத்து பணி இடங்களை உருவாக்கி அதன் மூலம் பத்து தொகுப்பூதிய செவிலியர்கள நிரந்தரபடுத்துங்கள் என்பது தான்.

 

எனவே தான் சமிபத்தில் அறிவிக்கபட்ட மருத்துவகல்லுரி மருத்துவமனைகளுக்கு இணையாக மாவட்டமாவட்ட மருத்துவமனைகளும் தரம் உயர்த்தபடும் என்ற திட்டத்தில் புதிதாக 1160 பணி இடங்கள் அறிவிக்கபட்டது. அது தொகுபூதியமா நிரந்தர ஊதியமா என்று கூட தெரிந்து கொள்ளமால் நமது துறையை சேர்ந்தவர்களே கொண்டினார்கள். PHC யில் மட்டும் தொகுப்பூதியம் என்ற நிலை மாறி மாவட்ட மருத்துவமனைகளில் தொகுபூதியத்தை அறிமுகபடுத்தினால் தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தம் பெற இன்னும் காலதாமதம் ஆகும் எனவே இவற்றை எல்லாம் நிரந்தர பணி இடங்களாக அறிவிக்க வேண்டும் என முறையிட்டு உள்ளோம்.

 

ஆனால் நிதி துறை இவ்வாறு புதிய பணி இடங்களை உருவாக்கினால் நிதிதுறைக்கு கூடுதல் நிதி சுமை ஏற்படும் என்ற காரணத்தால் புதிய பணிஇடங்கள் உருவாக்கதிற்கு மக்கள் நல்வாழ்வு துறை கருத்துரு அனுப்பினால் கூட ஏற்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதுதான் நிலைமை.

 

ஆனால் ஒரு விசயத்தை இப்போதே தெளிவு படுத்துகிறேன், MRB தேர்வு மூலமாக வரும் பிரைவேட் செவிலியர்கள் எப்படி சிறப்பாக காயை நகர்த்தி எவ்வளவு விரைவில் பணி நிரந்தரம் பெறுகிறார்கள் என்பதை மட்டும் பாருங்கள் ? ஆனால் இன்னும் சில மாதங்களில் துறையில் ஒரு தெளிவு பிறக்கும். நம்மை போல் சத்தியமாக அவர்கள் இருக்கமாட்டார்கள் ? அவர்களை பார்த்து கற்றுகொள்வோம்.

 

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மனது வைத்தால் மட்டுமே பெண்களாகி செவிலியர்கள் வாழ்வில் விடிவு பிறக்கும்.

 

 




 

1 comment:

தங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.