Thursday, 29 May 2014

கிரேடு 2 கவுன்சலிங் - 120 பேர்-ஹெட் நர்சாக பதவி உயர்வு - 120 நிரந்தர செவிலியர் காலி பணி இடங்கள்

 
கிரேடு 2 கவுன்சலிங் மூலமாக 120 மேற்பட்ட செவிலியர்கள் இன்று ஹெட் நர்சாக பதவி உயர்வு பெற்றனர்.

இந்த கவுன்சிலிங் பற்றிய தகவலை தெரிவிக்காததற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

அதற்கான காரணம் அன்றைய தினம் தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் சமந்தமாக சென்னை சென்று இருந்தோம்.




கிரேடு 2 கவுன்சலிங் மூலமாக பதிவு உயர்வு பெற்ற செவிலியர்கள் பணி புரிந்த இடங்கள் மற்றும் அவர்கள் பெயர்கள் உங்கள் பார்வைக்கு

1. S.SAHAYARANI Thoothukudi Government medical College Hospital, Thoothukudi.
2. A.PRABAVATHI Government Rajaji Hospital, Madurai.
3. MADHAVI BALASUBRAMANIAM Government Headquarters Hospital, Kumbakonam, Thanjavur.
4. J.GANDHIMATHI JAYARAJ Government Hospital, Srivilliputhur, Virudhunagar District.
5. LEENA GEORGE Government Stanley Hospital, Chennai-1.
6. MALLIGA DASS Rajiv Gandhi Government General Hospital, Chennai-3.
7. CHANDRA CHOKKALINGAM PILLAI Government Rajaji Hospital, Madurai-20.
8. JEEVA PERUMAL Government Headquarters Hospital, Madurai at Usilampatti.
9. MAHA JUBEEN NASARIN Rajiv Gandhi Government General Hospital, Chennai-3.
10. HELEN JASMIN JOHNSON Government Tiruvannamalai Medical College & Hospital, Tiruvannamalai.
11. KRISHNAVENI DURAIRAJ Government Headquarters Hospital, Kovilpatti, Thoothukudi District.
12. R.MARY Chengalpattu Medical College Hospital, Chengalpattu.
13. V.RAJAKANI Government Hospital, Bodinayakanur. Theni District.
14. N.ZERINA BEGUM Government Headquarters Hospital, Dindigul District.
15. K.LAKSHMI Government Primary Health Centre, Nainampatti, Salem District.
16. G.DHANALAKSHMI Government Headquarters Hospital, Kumbakonam.
17. V.SARASWATHY Government Headquarters Hospital, Kancheepuram District.
18. DEIVATHAL SENNIAPPA GOUNDER Government Hospital, Udumalpet, Tirupur.
19. N.IRULAYEE Government Headquarters Hospital, Ramanathapuram.
20. YESOTHA GOPAL NAIR Government Hospital, Vriddhachalam, Cuddalore District.
21. USHARANI RAMACHANDRAN Government Headquarters Hospital, Thanjavur at Kumbakonam.
22. S.VALARMATHY ESI Dispensary, Palanganatham, Madurai.
23. A.RAJESWARI ARUMUGAM Thoothukudi Medical College Hospital, Thoothukudi
24. R.BANUMATHY Government City Police Hospital, Egmore, Chennai-8.
25. NIRMALA NAGESWARI Government Hospital, Tirumangalam, Madurai at Usilampatti. District.
26. R.KANCHANA DEVI ESI Hospital, Coimbatore.
27. S.RAJATHI Government Hospital, Nannilam, Tiruvarur District.
28. GOMATHI MANICKA VASAGAM Government R.S.R.M. Hospital, Chennai.
29. STEPHEN SUGIRTHA SANTHI Government Headquarters Hosital, Pudukottai District.
30. V.KAMALAVENI Government Rajaji Hospital, Madurai-20.
31. M.SHEYAMALADEVI Government Headquarters Hospital, Namakkal District.
32. S.RENUKA Government Sivagangai Medical College and Hospital, Sivagangai.
33. PRAGASI LOUSIAMML FERNANDO ESI Dispensary, Thoothukdu-
34. MARIA STELLA APPAVOO Kanyakumari Government Medical College , Asaripallam.
35. CHANDRA APPU IOG and Government Hospital for Women and Children, Chennai-8.
36. AVUDAIAMMAL NAINAR Tirunelveli Medical College Hospital, Tirunelveli.
37. A.ALAGAMMAL Government Hospital, Paramakudi, Ramanathapuram District.
38. S.JOHNSI RANI Government Hospital, Srivilliputhur, Virudhunagar District.
39. G.ARUNA Government Sivagangai Medical College and Hospital, Sivagangai.
40. HELEN AGUSTABEL WILSON MABLE ROSE Kanyakumari Government Medical College Hospital, Asaripallam.
41. P.KANNAGI Government Rajaji Hospital, Madurai-20.
42. VASANTHI SAMBANDAM Government Hospital, Cheyyar, Tiruvannamalai District.
43. SASIKALA PICHUMANI Government Headquarters Hospital, Cuddalore.
44. P. KANNAGI Government Hospital, Rasipuram, Namakkal District.
45. A.ARUMUGAM THENMOZHI Coimbatore Medical College Hospital, Coimbatore.
46. N. KARTHIYAYINI Government Headquarters Hospital, Krishnagiri.
47. K. VEDAMBAL Government Hospital, Arakonam, Vellore District District.
48. M.ROSELIN LILLY BAI Institute of Child Health and Hospital for Children, Chennai-8.
49. SUSILA RANI Government Vellore Medical College Hospital, Vellore-11.
50. G. RAJESWARI Government Primary Health Centre, Belukurichi, Namakkal District.
51. S.DEIVA RANJANI Institute of Child Health and Hospital for Children, Chennai-8.
52. GIRIJA RAJENDRAN Government Stanley Hospital, Chennai-1.
53. E. USHA GNANA DEEPAM Rajiv Gandhi Government General Hospital, Chennai-3.
54. S.PARVATHAM Rajiv Gandhi Government General Hospital, Chennai-3.
55. K.BHUVANESWARI I Government Vellore Medical College Hospital, Vellore-11.
56. SHEELA RANI.B. Government Hospital, Arcot, Vellore District.
57. RATHNASAMY INDRANI Tirunelveli Medical College Hospital, Tirunelveli.
58. JANET CLARANCE Government Hospital, Tiruchendur, Thoothukudi District.
59. D. GRACE SUSEE Rajiv Gandhi Government General Hospital, Chennai-3.
60. MANNAKADU KUPPUSAMY SHANTHI Government Hospital, Pallipalayam, Namakkal District.
61. S. SAROJINI Government Rajaji Hospital, Madurai-20.
62. N.THAMILARASI Government Hospital, Rasipuram, Namakkal District.
63. NATESAN KALYANI Governmnet Headquarters Hospital, Nagapattinam.
64. M. GOVINDAMMAL Government Headquarters Hospital, Ramanathapuram.
65. T. SAROJA Governement Rajaji Hospital, Madurai-20.
66. PARAMASIVAN RAJALAKSHMI Government Royapettah Hospital, Chennai-14.
67. M.R. SARASWATHY Institute of Child Health and Hospital for Children, Chennai-8.
68. D. SUGUNA Government Hospital, Srirangam, Tiruchy District.
69. G. KALAVATHY Government Vellore Medical College Hospital, Vellore-11.
70. DEVAKATAKOHAM JOHN MARY PRESCILLA Rajiv Gandhi Government General Hospital, Chennai-3.
71. A. THAMIL SELVI Government Hospital, Gangavalli, Salem District.
72. SRINIVASA MUDALIAR VIJAYALAKSHMI Government Kilpauk Medical College Hospital, Chennai-10.
73. C. SUMATHY ESI Hospital, Coimbatore.
74. G. MANJULA ESI Hospital, Ayanavaram, Chennai-23.
75. B. ADHILAKSHMI Government Hospital, Arakonam, Vellore District.
76. R. GOMU Government Raja Mirasdar Hospital, Thanjavur-1.
77. R. UMA ESI Hospital, Ayanavaram, Chennai-23.
78. M. MEENAKSHI Government Headquarters Hospital, Dindigul District.
79. ARUMUGHAM PADMINI Government Kilpauk Medical College Hospital, Chennai-10.
80. KANNAN SHANTHI Government Dharmapuri Medical College Hospital, Dharmapuri.
81. P.R. MAHALAKSHMI Government Headquarters Hospital, Tiruvallur.
82. JACKULINE Government Hospital, Srivaikundam, Thoothukudi District.
83. RAMAN NAYAR KANAKALATHA Government Stanley Hospital, Chennai-1.
84. S. KRISHNAVENI Government Hospital, Avinashi, Tirupur District.
85. R. RAMATHAL Government Hospital, Mettupalayam, Coimbatore.District.
86. K.NIRMALA Rajiv Gandhi Government General Hospital, Chennai-3.
87. M. MUTHULAKSHMI Government Headquarters Hospital, Dindigul District.
88. GOVINDARAJULU SURYAKUMARI I.S.O. & Government Kasturba Gandhi Hospital for Women and Children, Triplicane, Chennai-5.
89. RANGARAJU CHANDRA Arignar Anna Government Hospital of Indian Medicine, Chennai-106.
90. P. THARANI Government Headquarters Hospital, Cuddalore.
91. R. SARASWATHI ESI Hospital, Ayanavaram, Chennai-23.
92. PAUL RAJAPPA ANTHONY Tirunelveli Medical College Hospital, Tirunelveli.
93. RANI NANDAKUMAR Government Stanley Hospital, Chennai-1.
94. KALAIMANI SWAMINATHA PILLAI Government Raja Mirasdar Hospital, Thanjavur-1.
95. T. AMUDHA Government Headquarters Hospital, Kancheepuram District.
96. MANI JAYANTHI Government Kilpauk Medical College Hospital, Chennai-10.
97. S. VIJAYA Governement Rajaji Hospital, Madurai-20.
98. PITCHAI STELLA ESTHER RAJAMANI Governement Rajaji Hospital, Madurai-20.
99. SAVITHIRI GOVINDAKUMAR Rajiv Gandhi Government General Hospital, Chennai-3.
100. G.SANTHA Government Royapettah Hospital, Chennai-14.
101. A. MANGAIYARKARASI Rajiv Gandhi Government General Hospital, Chennai-3.
102. V.ARUKANI Government Arignar Anna Memorial Cancer Hospital, Karapettai, Kancheepuram.
103. AMIRDA DOSS JOSEPH I.S.O. & Government Kasturba Gandhi Hospital for Women and Children, Triplicane, Chennai-5.
104. PAUL DAISY THANGAMANI Government Kilpauk Medical College Hospital, Chennai-10.
105. M. KALAISELVI Government Headquarters Hospital, Kumbakonam.
106. G. GIRIJA Institute of Child Health and Hospital for Children, Chennai-8.
107. S. JANAKI Rajiv Gandhi Government General Hospital, Chennai-3.
108. ARULDOSS SELVI Government Sivagangai Medical College and Hospital, Sivagangai.
109. M. RAJESWARI Government Rajaji TB Hospital, Tiruchy.
110. AYYANNA SELVI Government Royapettah Hospital, Chennai-14.
111. S. REGINA MARY Government Headquarters Hospital, Krishnagiri.
112. G. KAVERI Government Arignar Anna Memorial Cancer Hospital, Karapettai, Kancheepuram.
113. K. MYTHILI Government Hospital, Gingee, Villupuram District.
114. M.TAMILSELVI Government Stanley Hospital, Chennai-1.
115. E.M. MANGAYARKARASI Government Raja Mirasdar Hospital, Thanjavur-1.
116. V. RAJESWARI Mahatma Gandhi Memorial Government Hospital, Tiruchirapalli.
117. V. EZHILARASI Government Headquarters Hospital, Cuddalore.
118. A.JANAKA MARY Government Vellore Medical College Hospital, Vellore-11.
119. NAYANAR PREMA Government Tirunelveli Medical College Hospital, Tirunelveli.
120. A. JAYALAKSHMI Governement Rajaji Hospital, Madurai-20.
121. M. LAKSHMI ESI Hospital, Ayanavaram, Chennai-23.
122. M. TAMILARASI Government Royapettah Hospital, Chennai-14.

Monday, 19 May 2014

TAMILNADU GOVT NURSES DATA

ரெகுலர் சம்மந்தமான பணிகளில் கீழ்க்கண்ட தகவல்கள் நமக்கு மிகவும் உதவிகரமாகவும் முக்கியமாகவும் தேவைப்படும் என்பதால் அனைவரும் தகவல் அளிக்கவும்.

நிரந்தர செவிலியர்கள் விவரங்களையையும் அளிக்கவும். வரும் காலங்களில் முக்கியமாக தேவைப்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு செவிலியர்களின் விவரங்களை இணையதளம் மூலம் தொகுக்கும் பணியை ஆரம்பித்து உள்ளோம். தங்களுடைய நண்பர்கள் மற்றும் உடன் பயின்ற சகோதரசகோதரிகளின் விவரங்களை அவர்கள் விரும்பினால் நீங்களே பதிவு செய்து விடவும்.இதன் மூலம் செவிலியதுறை சமந்தமான அனைத்து நிகழ்வுகளையும் அனைவர்க்கும் தெரிவிப்பது சுலபமாக்கபடும். மேலும் கவுன்சலிங் மற்றும் அரசானை, மற்றும் பல்வேறு துறை சமந்தமான தகவல்களை எளிதாக தெரிவிக்க முடியும். மேலும் செவிலியசமூகத்தின் அனைத்து சகோதரசகோதரிகளை ஒரே நேர்கோட்டில் இணைப்பது நமது துறையின் வருங்களாக நலனுக்கு மிகவும் இன்றியமையாது என்ற காரணத்தால் இந்த பணி மேற்கொள்ளபடுகிறது.

கீழ்க்கண்ட படிவத்தில் ஏதேனும் குறைகள் அல்லது தங்களுடைய ஆலோசனைகள் கருத்துகள் ஏதேனும் இருந்தால் கீழ்க்கண்ட Email முகவரிக்கோ அல்லது அலைபேசி எண்ணிற்கோ தெரிவிக்கவும்.

tnnurses@gmail.com

cell: 9789 3435 91

                                                                         நன்றி 
                                                                     


Sunday, 18 May 2014

பணி நிரந்தரம் எப்பொழுது வரும், எப்படி வரும்?








பெரும்பாலான செவிலியர்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் போது நமக்கு எப்போ ரெகுலர், இந்த வருசத்துக்குள்ள வருமா, முன்னாடி எல்லாம் ஒரு மாசத்துக்கு 200 பேரா போட்டுடு இருந்தாங்க, என்று குழப்பி கொள்கின்றனர்.

 

இப்போது உள்ள நிலைமைபடி தொகுப்பூதிய செவிலியர்கள் எவ்வாறு பணி நிரந்தரம் செய்யபடுகின்றனர் என்றால் இருக்கிற நிரந்தர காலி பணி இடங்களை பொறுத்து அதாவது,

 

ஒரு மருத்துவமனையில் 50 செவிலியர்கள் பணி புரிகின்றனர் என்றால் அதில் ஒரு ஐந்து செவிலியர்கள் ஹெட்நர்ஸ் ஆகவும் இன்னும் ஒரு ஐந்து பேர் பணி ஓய்வும் பெற்று விட்டால் மொத்தத்தில் 10 நிரந்தர பணி இடங்கள் காலி.

 

அந்த பத்து நிரந்தர பணி இடங்களுக்கு தொகுபூதியதில் பணி புரியும் செவிலியர்கள் நிரந்தர செவிலியர்பணி இடங்களுக்கு ஈர்க்கபடுவார்கள்.

 

அதே போல் ஓமந்தூர் போன்ற மருத்துவமனைகள் மற்றும் சில புதிய திட்டங்களுக்கு நிரந்தர பணி இடங்களுக்கு உருவாக்கபட்டால் அதாவது சமீபத்தில் செவிலியர்களுக்கு ட்ரைனிங் தருவதற்காக உருவாக்கபட்ட 192 நிரந்தர பணி தொகுபூதிய செவிலியர்கள் ஈர்க்கபடுவார்கள். ஈர்க்கபட்டார்கள்..

 

இதே போல் தமிழகம் முழுவதும் ஏற்படும் காலி பணி இடங்கள் நிரப்பபடுகின்றன.

 

இந்த வருடம் அதாவது 2014 வருடம் ஹெட்நர்ஸ் ஆக பதவி உயர்வு பெற இருக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 225. ஏற்கனவே இந்த வருடம் பணி ஓய்வு பெற்ற நபர்களின் எண்ணிக்கை ஒரு 200 தாண்டும். இந்த எண்ணிக்கை 2008 பணியில் இணைந்த செவிலியர்களை நிரந்தரபடுத்தவே போய்விடும்

 

ஆகமொத்தம் கூட்டி கழித்து பார்த்தல் 2008 பணியில் இணைந்த செவிலியர்கள் மீதம் 500 மேற்பட்டோர் உள்ளனர். அவர்களுக்கு விரைவில் கவுன்சிலிங் வர வாய்ப்பு உள்ளது.

 

2009 பணியில் இணைந்த 1600 மேற்பட்ட செவிலியர்களுக்கு இந்த வருடம் பணி நிரந்தரம் வரவேண்டுமென்றால் இந்த வருடம் 1600 மேற்பட்ட செவிலியர்கள் பணி ஓய்வு பெறவேண்டும்.

 

எனவே தான் நாம் அரசிடமும் அதிகாரிகளிடமும் என்ன மாதிரியான முயற்சிகளையும், கோரிக்கைகளையும் முன்னெடுகிறோம் என்றால் புதிய நிரந்த பணி இடங்களை உருவாங்கள் என்பது தான். அதாவது ஒரு மருத்துவமனையில் 50 நிரந்தர செவிலியர்கள் பணி புரிகிறார்கள் என்றால் அதை 60 நிரந்தர செவிலியர்களாக மாற்றி கூடுதலாக பத்து பணி இடங்களை உருவாக்கி அதன் மூலம் பத்து தொகுப்பூதிய செவிலியர்கள நிரந்தரபடுத்துங்கள் என்பது தான்.

 

எனவே தான் சமிபத்தில் அறிவிக்கபட்ட மருத்துவகல்லுரி மருத்துவமனைகளுக்கு இணையாக மாவட்டமாவட்ட மருத்துவமனைகளும் தரம் உயர்த்தபடும் என்ற திட்டத்தில் புதிதாக 1160 பணி இடங்கள் அறிவிக்கபட்டது. அது தொகுபூதியமா நிரந்தர ஊதியமா என்று கூட தெரிந்து கொள்ளமால் நமது துறையை சேர்ந்தவர்களே கொண்டினார்கள். PHC யில் மட்டும் தொகுப்பூதியம் என்ற நிலை மாறி மாவட்ட மருத்துவமனைகளில் தொகுபூதியத்தை அறிமுகபடுத்தினால் தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தம் பெற இன்னும் காலதாமதம் ஆகும் எனவே இவற்றை எல்லாம் நிரந்தர பணி இடங்களாக அறிவிக்க வேண்டும் என முறையிட்டு உள்ளோம்.

 

ஆனால் நிதி துறை இவ்வாறு புதிய பணி இடங்களை உருவாக்கினால் நிதிதுறைக்கு கூடுதல் நிதி சுமை ஏற்படும் என்ற காரணத்தால் புதிய பணிஇடங்கள் உருவாக்கதிற்கு மக்கள் நல்வாழ்வு துறை கருத்துரு அனுப்பினால் கூட ஏற்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதுதான் நிலைமை.

 

ஆனால் ஒரு விசயத்தை இப்போதே தெளிவு படுத்துகிறேன், MRB தேர்வு மூலமாக வரும் பிரைவேட் செவிலியர்கள் எப்படி சிறப்பாக காயை நகர்த்தி எவ்வளவு விரைவில் பணி நிரந்தரம் பெறுகிறார்கள் என்பதை மட்டும் பாருங்கள் ? ஆனால் இன்னும் சில மாதங்களில் துறையில் ஒரு தெளிவு பிறக்கும். நம்மை போல் சத்தியமாக அவர்கள் இருக்கமாட்டார்கள் ? அவர்களை பார்த்து கற்றுகொள்வோம்.

 

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மனது வைத்தால் மட்டுமே பெண்களாகி செவிலியர்கள் வாழ்வில் விடிவு பிறக்கும்.

 

 




 

Tuesday, 13 May 2014


செவிலியர் தின தினமலர் சென்னை பிரதி





இன்றைய ஆங்கில ஹிந்து 13/05/2014

கண்ணீர் வருகிறது என்ற தலைப்பில்

ஏற்கனவே நாம் தெரிவித்து இருந்தோம் 18 நாட்கள் தொடர்ந்து பணி புரிந்த செவிலியர்

 

For village STAFF nurses, there is no respite from work






International Nurses Day on Monday will be another routine day for most nurses. It could be round-the-clock for those working in Primary Health Centres (PHCs).

A nurse in a PHC in Namakkal district has worked continuously for four days and nights last month. The PHC has only one nurse and she was relieved by a village health nurse during day when she sought leave to be with her sick baby. But she was asked to return for the night shift. In Karur district, some nurses have worked for 18 days without a break. A nurse attached to one of the PHCs in the district said when it became inevitable for her to take leave from work, a sweeper was put on duty. Though PHCs have village health nurses attached to them, nurses said the VHNs had field work and could not give that up.

Sometime ago, the government sought a private agency’s help to appoint nurses in PHCs. “But they are not well trained and cannot be allowed to handle the patients on their own,” points out a nurse who has been on contract for five years now and worked for several weeks without taking any off.

Ravi Seetharaman, vice-president, Tamil Nadu Government Contract Nurses Welfare Association, says: “This year, around 1,000 nurses were regularised. Next month, another 400-500 nurses will be regularised. It does not help to bring in nurses through private agencies as they are unable to handle the pressure in PHCs.” The association has sought permanent posts of nurses in villages.

“Inadequate number of nurses in private and government sector and disregard to the Indian Medical Council of India or Nursing Council norms are not helping the public healthcare system,” says G.R. Ravindranath, general secretary, Doctors’ Association for Social Equity.


Monday, 12 May 2014

செவிலியர்களை சுரண்டாதீர்கள் - தமிழ் தி ஹிந்து-12/5/2014





உரிமைகள் மறுக்கபடும் இந்த உலக செவிலியர் தினத்தில் எங்களது நியாமான கோரிக்கைகளையும் பிரச்சனைகளையும் அரசுக்கும் மக்களுக்கும் தெரிவிக்க உதவிய தமிழ் தி ஹிந்து நாளிதழுக்கு தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாக - 12-5-2014







Sunday, 11 May 2014

உலக செவிலியர் தினம் வைகோ வாழ்த்து - பணிப்பாதுகாப்பை உறுதி செய்து, ஊதிய உயர்வுகளை முறையாக வழங்கி கண்ணியப்படுத்தி கவுரவிப்பதே நாம் வழங்கும் நன்றிக் கடனாகும்


செவிலியர்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்து, ஊதிய உயர்வுகளை முறையாக வழங்கி கண்ணியப்படுத்தி கவுரவிப்பதே நாம் வழங்கும் நன்றிக் கடனாகும் மே-12 : உலக செவிலியர் தினம் வைகோ வாழ்த்து
“உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வான்என்று அப்பால்நாற் கூற்றே மருந்து” மருத்துவம் என்பது நோயாளி, மருத்துவர், மருந்து, அம்மருந்தை அருகில் இருந்து வழங்கும் தாதி என்ற நான்கு கூறுகளைக் கொண்டது என்று உலகப் பொதுமறையைத் தந்த திருவள்ளுவர் போதிக்கின்றார். 

 வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவிச்சிக் கூலி மகாநோவு தனைதீர்த்த மருத்துவன் கூலி இன்சொலுடனிவர் வலி கொடாத பேரை ஏதேது செய்வானே குழந்தையின் நஞ்சுக் கொடியை அறுத்த மருத்துவிச்சி (தாதி) ஊதியத்தையும், தீர்க்க முடியாத பெரிய நோயைக் குணப்படுத்திய மருத்துவர் ஊதியத்தையும், இன்சொல்லுடன் மனமகிழ்ச்சியோடு கொடுக்க வேண்டும் என்பது தமிழர்களின் உலக நியதி சொல்லும் சேதி. 

 செவிலியர் பணி என்பது தொழில் அல்ல; தொண்டு. ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சாதாரண மருத்துவச் சேவைகளிலிருந்து போர்க்கால மருத்துவ சேவைகள் வரை சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு தாய்க்கு நிகரான பரிவையும் சகிப்புத் தன்மையும் கொண்டு ஆற்றும் மகத்தான சேவை செவிலியர் பணி. இராணுவம், காவல்துறை போன்று இவர்களும் சீருடைப் பணியாளர்கள். இதை நினைவுகூர வேண்டியது நமது சமூகக் கடமை. 

 இங்கிலாந்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் 12.05.1820-ஆம் ஆண்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார். இறையருளால் தனக்கு இடப்பட்ட பணியாகவே செவிலியர் சேவையைத் தன் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக அப்பணியில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நவீன தாதியியல் முறையை உருவாக்கி செவிலியர் பயிற்சிப் பள்ளியை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தொடங்கினார். அவர் பிறந்த மே 12-ஆம் நாளே உலக செவிலியர் தினமாகும். பிளாரன்Þ நைட்டிங்கேல் போர்க்களத்தில் காயம்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இராணுவ வீரர்களை -- இரவு நேரங்களில் வலி தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தவர்களை -- கையில் இராந்தல் விளக்கை எடுத்துக் கொண்டு சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறி தேவையான மருந்துகளை வழங்கி அவர்களைத் தேற்றி, அவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, அவர்தம் குடும்பத்தினருக்குத் தெரிவித்து அவர்களது கவலைகளைப் போக்கி விரைந்து குணமடையச் செய்தார். இராணுவ வீரர்கள், தங்களைக் காக்க விண்ணுலகிலிருந்து தேவதையொன்று மண்ணுலகிற்கு கையில் விளக்குடன் வந்துள்ளது (Lady with lamp) என்று அகம் மகிழ்ந்து பாராட்டினர். 

 பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பணியைப் பாராட்டி செஞ்சிலுவைச் சங்க விருதும், பிரித்தானிய மன்னரின் ‘ஆர்டர் ஆப் மெரிட்’ என்னும் உயரிய விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டார். பிளாரன்Þ நைட்டிங்கேல் மறைவிற்குப் பின்பு அவரது தன்னலமற்ற பணியை நினைவுகூர ஆண்டுதோறும் மே திங்கள் 12-ஆம் நாள் லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் (Westminster Abbey) செவிலியர்களால் அந்த மாளிகையில் உள்ள விளக்குக்கு ஒளி ஏற்றி அந்நாளில் அங்கு வருகை தரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாற்றப்பட்டு அந்த மாளிகையின் உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு உன்னதமான உணர்வுப்பூர்வமான தருணமாகும். 

ஒரு செவிலியரிடம் இருந்து மற்றொருவருக்குத் தமது அறிவையும், அனுபவத்தையும், மனித நேயத்தையும் தோள் மாற்றம் செய்வதாகும். 

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் வழியில் தொடர்ந்து தொண்டாற்றி வரும் செவிலியர்களைத் தேர்வு செய்து, மத்திய மாநில அரசுகள் மே-12 ஆம் நாளில் அவர்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்து, ஊதிய உயர்வுகளை முறையாக வழங்கி கண்ணியப்படுத்தி கவுரவிப்பதே நாம் வழங்கும் நன்றிக் கடனாகும். 

புனிதமான செவிலியர் சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணியாற்றிக் கொண்டு வரும் அனைத்து செவிலியர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் உரித்தாக்குகின்றேன்.

 ‘தாயகம்’ வைகோ சென்னை - 8 பொதுச் செயலாளர், 11.05.2014 மறுமலர்ச்சி தி.மு.க

செவிலியதினமும் செவிலியர்நிலையும்







செவிலிய தினம் கொண்டாடபடும் இந்த நாளில் இன்றைய மருத்துவதுறையில் மருத்துவமனையின் முதுகெலும்பு என வர்ணிக்கபடும் செவிலியர்களையும் செவிலியதுறையையும் பற்றிய ஒரு சிறப்பு பார்வை

தொகுப்பூதியம் என்ற பெயரில் உழைப்பு சுரண்டல்:

The Government should act as a model employer and ensure that its employees are treated fairly in appointment and promotion, என்பது சுப்ரீம் கோர்ட்டின் ஆணை. கிராமபுறங்களில் செவிலியர்களின் சேவை மக்களுக்கு நிரந்தரமாக தேவை என்ற சூழல் உள்ளபோதும் தமிழகம் முழுவதும் உள்ள 1600 மேற்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல ஆண்டுகளாக மத்திய மாநில அரசாங்கங்கள் நிரந்தர செவிலியர்பணி இடங்களை தோற்றுவிக்காமல் தொகுப்பூதியம் என்ற பெயரில் செவிலியர்களிடம் உழைப்பு சுரண்டல் நடைபெறுகிறது. வெறும் 48 கோடி ஒதுக்கினால் தமிழகம் முழுவதும் ஒரு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு ஒரு நிரந்தர செவிலியரை அரசால் நியமிக்க இயலும். ஆனால் இதற்கு மக்கள் நல்வாழ்வு துறை எடுத்த முயற்சிக்கு கைகொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது நிதி துறை. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அவர்களது ஊதியம் ஏறும் போது மகிழ்ச்சி அடையும் அதிகாரிகளுக்கு இருப்பது போல் தான் தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் குழந்தை குடும்பம் இருக்கிறது என்பதை உணராமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.  அந்தபடி உயர்வு இந்த படி உயர்வு என 80000 சம்பளம் வாங்கும் நபர்களின் ஊதியத்தை ஒரு லச்சம் ஆகுவதற்கு ஒப்புதல் கொடுக்கும் நிதி துறை தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்த்ரதிற்கு புதிய நிரந்தர செவிலியர் பணி இடங்கள் உருவாக்கதிற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது கொடுமையின் உச்சம்.

தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் இலவசமாக பிரசவம் பார்க்கபடும் என்று மார்தட்டி கொள்ளும் அரசாங்கமும் அதிகாரிகளும் இந்த பெருமைக்கும் பேருக்கும் யார் அடிப்படை காரணம் என்பதை மறந்து விடுவது மட்டுமல்ல சுட்டி காட்டுவதும் கெடையாது. இத்தனைக்கும் போதுமான செவிலியர்கள் இல்லாத காரணத்தால் இரண்டு மூன்று வாரங்கள் தொடர்ந்து ஒரு தொகுப்பூதிய செவிலியரே ஒரு ஆரம்ப சுகாதர நிலையத்தில் பணி புரிந்து வருகின்றனர். இந்த கூடுதல் பணி நேரத்திற்கு அவர்களுக்கு அரசாங்கத்தில் இருந்து எந்த கூடுதல் நிதியும் வழங்கபடுவது கெடையாது.

மாவட்ட, தாலுக்க மருத்துவமனைகளில் செவிலியர்களின் நிலை

மாவட்ட, தாலுக்க மருத்துவமனைகளில் செவிலியர்களின் எண்ணிகை மிக மோசமான அளவில் உள்ளது, 1975 ஆம்ஆண்டு எத்தனை நிரந்தர செவிலியர் பணி இடங்கள் இருந்ததோ அதே அளவில் தான் இன்றும் பெரும்பாலான மாவட்ட, தாலுக்க மருத்துவமனைகளில் உள்ளது. உதாரணமாக ஈரோடு அரசு மருத்துவ மணியில் உள்ள 608 படுக்கைகளுக்கு வெறும் 80 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். நாகைபட்டினம் அரசு மருத்துவமனையில் 445 படுக்கைகளுக்கு வெறும் 51 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். இந்த எண்ணிக்கை மூன்று ஷிபிட்திற்கும் சேர்த்து என்பது நாம் கவனிக்க வேண்டும். NABH சிறப்பு அந்தஸ்து பெற்ற நாமக்கல் அரசு மருத்துவமனையில் 313 படுக்கைகளுக்கு வெறும் 43 நிரந்தர செவிலியர்கள் மட்டுமே உள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு அரசால் அறிவிக்கபட்ட மருத்துவகல்லுரி மருத்துவமனைகளுக்கு இணையாக மாவட்டமருத்துவமனைகளை தரம் உயர்த்தபடும் என்று அறிவிக்கையில் புதிதாக 1160 தொகுப்பூதிய செவிலியர் பணி இடங்கள் அறிவிக்கபட்டன. ஏன் இந்த செவிலியர்களுக்கு அங்கு நிரந்தர தேவை இல்லையா, இல்லை தமிழகதில் போதுமான அளவில் தொகுப்பூதிய செவிலியர்கள் இல்லையா என்று தெரியவில்லை, அதே அரசு ஆணையில் மருத்துவர்களை மட்டும் நிரந்தரமாக பணி அமர்த்தி உள்ள அரசு எதற்காக செவிலியர்களிடம் பாராமுகமாய் நடந்து கொள்கிறது என்று தெரியவில்லை. இதற்கு முழு காரணமும் நிதி துறையின் ஒப்புதல் இல்லாதது தான்.

கட்டடங்கள் செய்யுமா சேவை
எல்லா மருத்துவமனைகளிலும் எங்கு பார்த்தாலும் உயர உயர கட்டங்கள் கட்டும் பணி மட்டும் சிறப்பாக நடந்து வருகிறது. ஆனால் வெறும் கற்களும் செங்கலும் சேவை செய்யாம என்பதை சிந்திக்க வேண்டும். புதிய கட்டிங்கள் திறக்க படுகிறது ஆனால் அங்கு பணிபுரிய செவிலியர் பணி இடங்கள் உரூவாக்க படுவது கெடையாது. மதுரை, மற்றும் தூத்துகுடியில் புதியதாக திறக்கபட்ட 300 மேற்பட்ட படுக்கைகள் கொண்ட கட்டிடங்களுக்கு இன்னும் செவிலியர்களை நியமனம் செய்யவில்லை.

காற்றில் பறக்க விடப்படும் இந்திய மருத்துவகவுன்சில் விதிகள்:
பெரும்பாலான மருத்துவகல்லுரி மருத்துவமனைகளில் MCI விதிப்படி செவிலியர்களை நியமிக்காமல் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் பொழுது மட்டும் இல்லாத செவிலியர்களை இருப்பதாக தவறாக கணக்கு காண்பிக்க படுவதால்  தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் பாராமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் நோயாளிகள் சரியான மருத்துவ சேவை கிடைக்காமல் உயிர் இழக்கும் ஆபாயமும் உண்டு.


துப்புரவு பணியாளர்களை விட குறைந்த ஊதியம்
சென்னை ஸ்டான்லி மற்றும் MMC ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணி புரியும் செவிலியர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக வெறும் 5500 ஊதியம் மட்டுமே வழங்கபட்டு வருகிறது, இவர்கள் தலைமையான DME யில் பணி புரியும் வாட்ச்மென் ஊதியம் 6000 ரூபாய், SWEEPER,  SANITARY WORK ஊதியம் 7500 ரூபாய்

வருடத்திற்கும் இரண்டு முறை ஊதியம்
தொகுப்பூதியம் என்ற காரணத்தால் அரசில் இருந்து செவிலியர்களுக்கு நிதி ஒதுக்குவதில் மிகுந்த காலதாமதம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் நிதி வந்த பிறகும் கூட அலுவலக ஊழியர்களின் அலச்சியதாலும் லஞ்சம் கொடுத்தால் தான் ஊதியம் தரப்படும் என்ற சூழலில் அதுவும் மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ ஆறு மாதத்திற்கு ஒரு முறையை தான் வழங்கபடுகிறது.

செவிலிய துறை பற்றிய சமுதாயத்தின் பார்வை
ஒரு துறை அல்லது ஒரு படிப்பு நல்ல படிப்பா அல்லது
சமுதாயத்தால் மதிக்கபடும் படிப்பா என்பதற்கு ஒரு அளவுகோல் எது எனில் தான் பயின்ற கல்வியை தனது குழந்தைகளும் கற்க வேண்டும் என பெற்றோர் நினைப்பதுதான்.

அப்படி பார்த்தல் செவிலிய துறையில் பணி புரியும் செவிலியர்கள் 100 இக்கு 99% சதவிதம் பேர் யாரும் தனது குழந்தைகளை செவிலியம் படிக்க அனுப்புவது கெடையாது.

ஒரு மருத்துவர், ஒரு என்ஜிநியர் இவர்கள் எல்லாம் தனது கல்வியை தனது வாரிசுகளுக்கு அளிப்பதில் பெருமை கொள்கிறார்கள். ஆனால் நமது நாட்டில் செவிலியர்கள் அவ்வாறு பெருமைகொள்வார்களா ?


சேவை சேவையாக இருக்க அதற்குரிய மதிப்பும் மரியாதையும் குடுக்கபடவேண்டும், துப்புரவு தொழிலாளிக்கும் எனக்கும் ஊதியம் ஒன்று என்றால் என்ன சேவை ? அந்த தொழிலை நான் அவமதிக்கவில்லை ஆனால் எங்கள் துறை அவமதிக்கபடுகிறது அந்த வேதனை

MCI விதியும் தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரமும்

MCI விதி என்றால் என்ன ?
இந்திய மருத்துவ கவுன்சில் (MCI) என்பது மருத்துவ கல்லுரி, மற்றும் மருத்துவ கல்லுரி மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு முதல் செவிலியர்கள், மருத்துவர்கள் பேராசிரியர்கள், அடிப்படை ஊழியர்கள் என அனைத்து துறையினரும் போதுமான அளவில் உள்ளனரா எனவும், மேலும் செவிலியர்-நோயாளி-படுக்கைகள் ஆகியவற்றின் விகிதசாரம் போதுமான அளவில் உள்ளதா எனவும்,நோயாளிகள் ஊழியர்கள் என அனைவர்க்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கபட்டு உள்ளதா எனவும் ஆய்வு செய்து அதன் பின்னர் அங்குள்ள படுக்கைகளின் எண்ணிக்கை மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை, மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றை பொறுத்து அங்கு ஓராண்டிற்கு எத்தனை மருத்துவகல்லுரி மாணவர்களை (MBBS-PG) சேர்க்கலாம் என்பதற்கு அனுமதி அளிப்பார்கள். மேற்கண்ட விசயங்களில் குறைகள் இருக்கும் பட்சத்தில் அந்த கல்லூரியின் மருத்துவகல்லுரி மாணவர்களின் எண்ணிகையை குறைக்கவோ, அல்லது கல்லூரியின் அங்கிகாரத்தை ரத்து செய்யவோ செய்வார்கள்.

அரசு மருத்துவ கல்லூரிகள் செய்வது என்ன ?  
பொதுவாக நாம் நினைப்பது எத்தனை மருத்துவ கல்லுரி மாணவர்களை எடுத்தால் நமக்கு என்ன என்று என்ன தோன்றும். ஆனால் பிரச்னை அதுவல்ல இந்திய மருத்துவகவுன்சில் ஆய்வுக்கு வரும்போது  மருத்துவமனையில் MCI விதிப்படி இல்லாமல் குறைவாக உள்ள செவிலியர்களின் எண்ணிகையை MCI க்கு தெரிவிக்காமல் தேவையான அளவில் செவிலியர்கள் இருப்பது போல் போலியாக கணக்கு காண்பிக்கபடுகிறது.

உதாரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவகல்லுரி மருத்துவமனையில் கடந்த 2012 ஆண்டு நடந்த ஆய்வின் போது வெறும் 130 நிரந்தர செவிலியர்கள் மட்டுமே அங்கு பணி புரிந்தாலும் 247  பேர் பணி புரிவதாக கணக்கு காண்பிக்கபட்டு உள்ளது. மேலும் அவற்றில்  50 செவிலியர்களுக்கு MCI விதிப்படி விடுதி வசதி ஏற்படுத்தி கொடுக்கபட்டு உள்ளதாக வேறு ஆவணங்களை தயார் செய்து அளித்து உள்ளார்கள்.
 இதே போன்று 1200 படுக்கைகள் மற்றும் 150 M.B.B.S  மாணவர்கள் சேர்கை கொண்ட திருச்சி அரசு மருத்துவகல்லூரியில் 350 மேற்பட்டோர் பணி புரிய வேண்டிய சூழலில் வெறும் 130 பேர் மட்டுமே பணி புரிகின்றனர். இத்தனைக்கும் செவிலியதுறையில் முக்கிய பொறுப்பு வகிக்கும் முக்கியமாணவர்கள் பணி புரியும் இடம். அதன் நகல் இங்கு தரபட்டு உள்ளது. இதே போன்று தஞ்சாவூர், கோயமுத்தூர், மதுரை என பட்டியல் நீள்கிறது.
500 படுக்கைகள் கொண்ட திருவாருர் அரசு மருத்துவ கல்லூரிக்கு 247 நிரந்தர செவிலியர்கள் ஆனால் மதுரை அரசு மருத்துவகல்லுரி மருத்துவமனையில் 2518 படுக்கைகளுக்கு 307 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். இந்த செவிலியர் எண்ணிக்கை மூன்று ஷிஃப்ட்டிர்கும் சேர்த்து என்பதை மறக்கவேண்டாம்.

இங்கு இருக்கின்ற மற்றும் MCI விதிப்படி தேவைப்படுகின்ற செவிலியர்களின் எண்ணிக்கை உங்கள் பார்வைக்கு




மற்றுமொரு விஷயம் செவிலியர்கள் எண்ணிக்கை ACCORDING TO MBBS STRENGTH என்பது மட்டுமல்ல ACCORDING TO BED STRENGTH படியும் இருக்க வேண்டும். சோற்றுக்கே வழி இல்லாதபோது பிரியாணி கிடைக்குமா என்ற கதைதான்.



மேலும் MCI ஆய்வுக்கு வரும் போது அந்த மாவட்டத்தில் உள்ள PHC யிலோ அல்லது GH லோ பணி புரியும் தொகுப்பூதிய செவிலியர்கலையோ அல்லது அங்கு அரசு செவிலியபள்ளியில் படிக்கும் செவிலிய மாணவிகளையோ தலையில் பெரிய செவிலிய குல்லாவை அணிவித்து போதுமான அளவில் செவிலியர்கள் இருப்பதாக MCI க்கு கணக்குகாண்பித்து விடுகிறார்கள். இது சமந்தமாக நாம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தயார் செய்த கோப்பு  இங்கு இணைத்து உள்ளோம்.

இதனால் தொகுப்பூதிய செவிலியர்கள் மற்றும் நிரந்தர செவிலியர்கள் எவ்வாறு பாதிக்கபடுகிறார்கள்.

இவ்வாறு பல மருத்துவகல்லுரிகள் தவறாக போலியான செவிலியர் எண்ணிகையை அளிப்பதால் அங்கு ஏற்கனவே பணியில் உள்ள செவிலியர்கள் மூன்று மடங்கு அதிகமான செவிலியபணி சுமையை சுமக்க வேண்டியுள்ளது. மேலும் நோயாளிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இங்கு முக்கியமாக இதை ஏன் தொகுப்பூதிய செவிலியர்கள் கவனிக்க வேண்டுமென்றால் நமது தொகுப்பூதிய அரசானை படி இரண்டு ஆண்டு கண்டிப்பாக தொகுபூதியதில் பணி புரிய வேண்டும் அதன் இருக்கிற நிரந்தர செவிலிய காலிபணி இடங்களை பொறுத்து படிபடியாக பணி நிரந்தரம் செய்ய படுவர். அதாவது ஏற்கனவே பணியில் உள்ள செவிலியர் பதவி உயர்வு பெற்று ஹெட்நர்ஸ் ஆனாலோ அல்லது செவிலியர் ஆக இருந்து பணி ஓய்வு பெற்றால் ஏற்படும் காலி பணிஇடங்களை பொறுத்தே நாம் நிரந்தரம் செய்யபடுகிறார்கள்.
ஆனால் மருத்துவகல்லூரிகளில் இல்லாத செவிலியர்களை இருப்பதாக கணக்கு காண்பித்தால் இல்லாத செவிலியர்கள் எவ்வாறு பதவி உயர்வுவோ அல்லது பணி ஓய்வோ பெற முடியும்,

உதாரணமாக செங்கல்பட்டு மருத்துவகல்லூரியில் வெறும் 130 நிரந்தர செவிலியர்களை வைத்து கொண்டு 247 என கணக்கு காண்பிப்பதால் மீதம் உள்ள 117 பணி இடங்கள் தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற்று செல்ல வேண்டிய நிரந்தர பணி இடங்கள். ஆனால் இவ்வாறு காலி பணி இடங்கள் இருப்பதையோ, அல்லது உருவாக்க வேண்டிய தேவை இருப்பதையியோ நிர்வாகம் அரசுக்கு தெரிவிக்க தவறுகிறது அப்படியே தெரிவித்தாலும் நிதித்துறை அதனை தட்டிகழிக்கிறது அல்லது யானைபசிக்கு சோளபொறி போட்டது போல் 200 செவிலியர்கள் தேவை என மக்கள் நல்வாழ்வு துறை கருத்துரு அனுபினால் வெறும் 5 பேரோ அல்லது 10 பேரோ மட்டுமே நிதி துறையால் அனுமதிக்க படுகின்றனர். இதற்கு செவிலிய துறை மீது உள்ள அலட்சியமான போக்கா இல்லை மக்கள் நலன் மேல் உள்ள அக்கறையின்மையா காரணமா என்று தெரியவில்லை.

இங்கு தெரிவித்து இருப்பது மேலோட்டமான விசயங்கள்தான், இது சமந்தமான மேலும் பல்வேறு ஆழமான விசயங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்று நமது துறை உயர்அதிகாரிகளிடம் ஒரு வருடத்திற்கு முன்னரே சமர்ப்பித்து விட்டாகிவிட்டது. ஆனால் தீர்வு தான் காணபடவில்லை. இவ்வாறு நியாமான கோரிக்கையை முன்னிறுத்தி செயல்படுவது அரசுக்கு எதிரான செயல் என்பது போல் சிலர் சித்தரிகின்றன்ர், ஆனால் அது அவ்வாறல்ல இது எங்களது உரிமைகளை பெறுவதற்கான ஒரு முயற்சியே. இந்திய சுகந்திரம் அடைய போராடியவர்கள் சுகந்திரகாற்றை சுவாசிக்கவும் தங்கள் உரிமைகளை பெறவுமே போராடினார்கள், அதனை அரசுக்கு எதிராக போராடினார்கள் என்றா நாம் கூறுகிறோம்? வெற்றி கதவை திறக்க அனைத்து விதமான வழிகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளபடுகின்றன.விரைவில் வெற்றி பெறுவோம்.

நன்றி