Monday, 24 March 2014

www.cbnurse.com - தற்காலிகமாக கீழ்க்கண்ட இணையதளம் இயங்கும் ஆனால் இது தமிழ்நாடு அரசு தொகுப்பூதிய செவிலிய நலசங்கத்தின் அதிகாரபூர்வ இணையதளம் அல்ல, அதில் வரும் தகவல்கள் சங்கத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் அல்ல..



 




 

 

www.cbnurse.com



 

நமது தமிழ்நாடு அரசு தொகுப்பூதிய செவிலிய நலச்சங்கத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் சில வசதிகளை மேம்படுத்துவதற்காக சில மென்பொருள் மேம்பாட்டு  பணிகள் நடைபெற உள்ளத்தால் இன்னும் ஒரு சிலநாட்களுக்கு இணையம் இயங்காது. அதிகபட்சம் ஒரு மாத காலத்திற்குள் இணையம்  புதுபொலிவுடன் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும்.


தங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துகிறோம்


 


 
 
 

 
 

Friday, 14 March 2014

ஜனவரி மாதம் அறிவிக்கபட்ட 1160 செவிலியர் பணி இடங்கள் அனைத்தும் காண்ட்ராக்ட்



கடந்த ஜனவரி மாதம் 1160 செவிலியர் பணி இடங்கள் உருவாக்க பட்டுஉள்ளகாக செய்தி வெளியிடபட்டது.

அதன் தொடர்ச்சியாக இப்போது அந்த அரசு ஆணை GO 32 வெளியிடபட்டு உள்ளது.

செவிலியர்களுக்கு தொகுப்பூதிய சம்பளம் 7700+வருடா வருடம் 500 ஏற்றி தரப்படும்.


ஆனால் 484 நிரந்தர மருத்துவர் பணி இடங்கள் புதிதாக உருவாக்கபட்டு உள்ளன.

சம்பளம்:-15600-39,100+GP RS.5400.

ஒரே ஒரு நிரந்தர செவிலியர் பணி இடம் கூட உருவாக்கபடவில்லை என்பதே கசப்பான உண்மை.

சத்தியமாக இதை பார்த்த உடன் கண்களில் கண்ணிர் தான் வருகிறது. இதை விட நிரந்தர பணி இடங்களை உருவாக்க நல்ல வாய்ப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை.
 
கடந்த ஜனவரி 25 இதே தளத்தில் 1160 பணி இடங்கள் உருவாக்கபட்டதற்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில் கீழ்கண்ட வரியை நாம் குறிப்பிட்டு இருந்தோம்.

குறிப்பு: பொதுவாக அனைவருக்கும் வரும் சந்தேகம் இவற்றில் எத்தனை பணி இடங்கள் நிரந்தரம் & தொகுப்பூதிய பணி இடங்கள் என்று. இதை பற்றிய தெளிவான விளக்கம் விரைவில் தரப்படும்.

விளக்கம் போதும் என நினைக்கிறேன்.