Sunday, 28 December 2014

திருச்சி ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்க கூட்டம்தமிழ்நாடு ஒப்பந்த செவிலியர் நலசங்கத்தின் கூட்டம் திருச்சியில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கபட்டது.
 
 
 
 
 

 

 

 
கூட்டத்திற்கு வந்த அனைத்து செவிலிய சகோதரிகளுக்கும், கூட்டத்திற்கு வந்த அவர்களுடைய பெற்றோர்களுக்கும் எங்கள் நன்றி. தொலைவில் உள்ள பல மாவட்டங்களில் இருந்து பல்வேறு இன்னல்களையும் பொருட்படுத்தாமல் செவிலியர்கள் உணர்வோடு கலந்து கொண்டது மகிழ்ச்சி.
 
 

 
 உங்களுடைய இந்த சோர்வு, வலி, வேதனை தான் சங்கத்திற்கான உந்து சக்தி


 

 
 
நிகழ்சிக்கு திரு. ஆரோக்கியதாஸ், திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். செல்வி.கலைச்செல்வி அவர்கள் மாநில இணை செயலாளர் தலைமை தாங்கினார்.


 


உயர்திரு சட்டமன்ற உறுப்பினர் திரு. குணசேகரன் MLA அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

 

மேலும் உமாபதி, ரவி சீத்தாராமன், சிலம்பரசன், வசந்த், கவிராஜ், மாரிமுத்து, நந்தினி, வள்ளி அவர்கள் உரையாற்றினார்கள்.

 
 
 
 
 
இதன் தொடர்ச்சியாக கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.


இதனை வரும் வாரம் அரசிடம் சமர்பிக்க உள்ளோம்.

1.       தமிழக சுகாதார துறையில் கடந்த ஆண்டுகளில் சுமார் 2000 மேற்பட்ட நிரந்தர செவிலிய பணி இடங்களை உருவாக்கிய மாண்புமிகு மக்கள் முதல்வர் அம்மா அவர்களுக்கும், தமிழக முதல்வர் அவர்களுக்கு, மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர்  அவர்களுக்கும் இச்சங்கம் நன்றியை தெரிவித்து கொள்கிறது.

 

2.       மருத்துவ சேவையில் இந்தியாவில் முதல் முன்னோடி மாநிலமாக தமிழகம்விளங்குகின்றது. அதன் பெரும் பங்களிப்பு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரியும் செவிலியர்கள் என்றால் அது மிகையல்ல. PHC யின் அனைத்து நிலைகளிலும் MEDICAL OFFICER PHARMACIST, ANM, VHN, LAB TECHNICIAN, HOSPITAL WORKER ஆகியோருக்கு நிரந்தர பணி அமர்வு இருக்கும் நிலையில் செவிலியர்களுக்கு மட்டும் இருக்கும் ஓப்பந்த முறையை ரத்து செய்யவும், முதற்கட்டமாக 1600 க்கும் மேற்பட்ட PHCயில் ஒரு நிரந்தர செவிலியர் பணி இடத்தை உருவாக்கிடவும், படிப்படியாக கூடுதல் நிரந்தர பணி இடங்களை உருவாக்கிடவும், நமது தமிழக அரசினை இச்சங்கம் வேண்டி கேட்டு கொள்கிறது.

 

3.       தமிழக சுகாதார துறையில் செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமா பணி அமர்த்துவதை கைவிட்டு இந்தி வரும்காலங்களில் மக்கள் செவியை கருத்தில் கொண்டு செவிலியர்களை நிரந்தரமாக் பணி அமர்த்த வேண்டி இச்சங்கம் நமது தமிழக அரசினை வேண்டி கேட்டு கொள்கிறது.

 

4.       தமிழக அரசின் அரசாணைபடி அரசு மருத்துவ மனைகளில் பணிபுரிந்த செவிலியர்களில் இரண்டு ஆண்டுகள் ஓப்பந்த காலம் போக மீதம் உள்ள காலத்தை நிரந்தர காலத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு நமது தமிழக அரசினை இச்சங்கம் வேண்டி கேட்டு கொள்கிறது.

 

5.       மக்கள் முதலவர் வழங்கிய மகப்பேறு விடுப்பு, ஓப்பந்த அடிப்படை காரணமாகவும், பணி நிரந்தர கால தாமதத்தின் காரணமாகவும், மகப்பேறு விடுப்பும், மகப்பேறு விடுபிற்கான ஊதியமும் வழங்கபடுவது இல்லை. தாயுள்ளத்தோடு எந்த வித நிர்பந்தமும் இன்றி ஆறு மாத மகப்பேறு விடுப்பையும் ஊதியத்துடன் வழங்க  வழிவகை செய்ய இச்சங்கம் வேண்டி கேட்டுகொள்கிறது.

 
 
மேலும் இதன் பின்னர் இந்த வருட அதாவது 2015 இறுதிக்குள் நாம் அனைவரும் பணி நிரந்த்ரம் பெற தவறினால் அதன் பின்னர் தேர்தல், விதிமுறைகள், என்று பல பிரச்சனைகளை சுட்டி காட்டி அடுத்த ஆண்டு அதாவது 2016 இறுதி ஆகிவிடும். அதன் பின்னர் நேரிடையாக 2017, 2018 தான். 


எனவே நமது அரசிடம் நமது நியமான கோரிக்கைகளை முறையாக சரியான வழியில் எடுத்து செல்ல முடிவு செய்து உள்ளோம். எதுவாக இருபினும் அனைத்து செவிலியர்களும் ஒன்று பட்டு ஒரே குரலில் நமது கோரிக்கையை வைத்தால் மட்டுமே நாம் நமது நியமான கோரிக்கைகளை வென்று எடுக்க முடியும்.

 

மேலும் ஏற்கனவே புதிதாக ஆரம்பிக்க பட்ட 118 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மாவட்ட மருத்துவமனைகளிலும் நமது மக்கள் முதல்வர் அவர்கள் ஆட்சியில், மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் கருணையாலும், அதிகாரிகளின் சீரிய முயற்சியாலும் GO 400 வெளியிட்டு 500 க்கும்  மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளது நமது தமிழக அரசு.

 

 


 
 
 

இதே போல் 2009 ஆண்டு முதல் 2014 ஆண்டு வரை 4000 மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படை என்ற இருளில் இருந்தாலும் அடுத்து தேர்தல் வரும் முன்னர் மீதம் உள்ள அனைத்து தொகுப்பூதிய செவில்யர்கள் அனைவர் வாழ்விலும் பணி நிரந்தரம் என்ற தீப விளக்கை ஏற்றி 2015 ஆம் ஆண்டு தொகுப்பூதிய செவிலியர்கள் இனிய ஆண்டாக அமைய நமது மக்கள் முதல்வர் அம்மா அவர்களும், தமிழக அரசும் நமக்கு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் இதனை அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது நமது கடமை.

 

 
 
 

 
 

 
 

 
 
 
 அனைத்து செவிலியர்களுக்கும் வரும் வருடம் இனிய வருடமாக அமைய அந்த இறைவனை வேண்டி இனிய புத்தாண்டு தின வாழ்த்துக்கள்

Monday, 22 December 2014

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டம்

வரும் 27-12-2014 அன்று திருச்சியில், நமது தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கத்தின் செயற்கு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து ஓப்பந்த செவிலியர்களும் தவறாமல் கலந்து கொள்ளவும்.

தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கத்தின் கிருஷ்ணகிரி  மாவட்ட கூட்டம் (சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் அடங்கிய) கடந்த 14-12-2014 அன்று தர்மபுரியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருமதி.நந்தினி, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. ஸ்ரீநிவாசன், அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். திரு. மாதேஷ், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் , திரு. முனிராஜ் செவிலியர்,  அரசு மருத்துவமனை தர்மபுரி, திரு. வெங்கட், செவிலியர், திரு. இளவரசன். செவிலியர்  ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். 

திரு. பிரசண்ணகுமார், செவிலியர், அரசு மருத்துவமனை, குடியாத்தம் அவர்கள் நன்றியுரை கூறினார்.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மனங்கள்:-

1.   தமிழகத்தில் மக்கள் சேவையை கருத்தில் கொண்டு 2000 த்திற்கும் மேற்பட்ட நிரந்தர செவிலியர் பணியிடங்களை உருவாக்கியமைக்கு மக்கள் முதல்வருக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டது.

2.   கிராமப்புற மக்களுக்கு சேவை செய்ய அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நிரந்தர செவிலிய பணியிடங்களை உருவாக்கி 4500 ற்கும் மேற்பட்ட ஒப்பந்த அடிப்படை செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டி தீர்மானம் இயற்றப்பட்டது.

3.   அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் குழந்தைகள் வார்டு மற்றும் NICU வில் MCI விதிப்படி செவிலியர்களை பணியமர்த்த வேண்டி தீர்மானம் இயற்றப்பட்டது.
4.   ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை தற்காலிகமாக பணியமர்த்துவதை கைவிட்டு செவிலியர்களை மக்கள் சேவையை கருத்தில் கொண்டு நிரந்தரமாக பணியமர்த்த வேண்டி தீர்மானம் இயற்றப்பட்டது.

5.   அரசாணை 230 படி செவிலியர்களின் 2 ஆண்டு ஒப்பந்த முறை போக மீதமுள்ள ஆண்டுகளை பணியில் இணைக்க வேண்டி தீர்மானம் இயற்றப்பட்டது. 

Thursday, 18 December 2014

505 தொகுப்பூதிய செவிலியர்களின் தலைஎழுத்தை மாற்றி எழுத போகும் மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் அரசு ஆணை 400505 தொகுப்பூதிய செவிலியர்களின் தலைஎழுத்தை மாற்றி எழுத போகும் மக்கள் முதல்வர் அவர்களின் அரசு ஆணை  400

 

முதலில் மாண்புமிகு மக்கள் முதல்வர் அம்மா அவர்களுக்கு 4000 மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் சார்பாகவும் அவர்களின் குடும்பத்தின் சார்பாகவும் மக்கள் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

 

தமிழக வரலாற்றிலேயே இல்லாமல் மாண்புமிகு மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் ஆட்சியில் முதல் முறையாக புதிதாக உருவாக்கபட்ட 118 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் ஒரு நிரந்தர செவிலியர் இரண்டு தொகுப்போதிய செவிலியர் மற்றும் பதினைந்து தாலுகா மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் 387 நிரந்தர செவிலிய பணி இடங்கள் தோற்றுவிக்கபட்டு அரசு ஆணை 400 வெளியிடபட்டு உள்ளது.

 

இதற்காக முயற்சிகள் மேற்கொண்ட மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஐயா அவர்களுக்கும், மரியாதைக்குரிய மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் சார் அவர்களுக்கும் DMS சந்திரநாதன் சார் மற்றும் DPH குழந்தைசாமி சார் அவர்களுக்கும், முதல் முறையாக இவ்வளவு செவிலியர் பணி இடங்களுக்கு ஒப்புதல் அளித்த நிதி துறைக்கும் 4000 மேற்பட்ட தொகுபூதிய செவிலியர்கள் சார்பாகவும் அவர்களின் குடும்பத்தின் சார்பாகவும் எங்கள் இதயத்தில் இருந்து நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

 

இங்கு ஒரு சில வரிகளில் இந்த மகிழ்ச்சியை ஒரு சில வரிகளில் நாம் பகிர்ந்து கொண்டாலும் இதற்க்காக எடுத்த முயற்சிகள் வரிகளிலோ வார்த்தைகளிலோ விவரிக்க முடியாது. இதற்கு முயற்சி மேற்கொண்ட ஒத்துழைப்பு நல்கிய அனைத்து செவிலிய சகோதரசகோதரிகளுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.

 

வரும் 27/12/2014 திருச்சியில் அருண் மேக்சி ஹாலில் இந்த அரசு ஆணையை வெளியிட்டதற்காக மக்கள் முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவிக்வும் இதே போல் வரும் காலங்களில் இனிய செய்திகள் வர எடுக்க வேண்டிய முயற்சிகள் மற்றும் மற்ற விசங்களை குறித்து பேச உள்ளோம்.

 

முயற்சிகள் தோற்று போகலாம் ஆனால் முயற்சிக்கலாம் போககூடாது. ஒரு காலத்தில் தொகுபூதிய செவிலியர்கள் மேற்கொண்ட முயற்சிகளை வீண் முயற்சி என்று ஏளனம் பேசியவர்கள் உண்டு. ஆனால் இன்று மேற்கொண்ட முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்து உள்ளது.

 

உடனே RANK LIST யில் அடுத்து உள்ள 505 செவிலியர்களும் இனிமேல் எதிலும் பங்கு கொள்ள தேவை இல்லை அதான் நமக்கு வந்து விட்டதே என்று எண்ணி ஓய்வேடுக என்ன எண்ண வேண்டாம், அதை விட மீதம் உள்ள 3000 மேற்பட்ட தொகுபூதிய செவிலியர்களுக்கு செய்யும் துரோகம் ஒன்றும் இல்லை. ஏனெனில் இதில் அவர்களின் பங்கும் உள்ளது.

 

வரும் 27/12/2014 திருச்சியில் அருண் மேக்சி ஹாலில் நடைபெற உள்ள மீட்டிங்கிற்கு அனைத்து செவிலியர்களும் கலந்து கொள்ளுங்கள், அரசானை குறித்தும் அடுத்த கவுன்சிலிங் குறித்தும் மற்ற விவரங்கள் அனைத்து அங்கு தெரிவிக்கபடும்.

 

இது சமந்தமாக தொலைபேசியில் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம். மீடிங்கில் அனைத்து விவரங்களும் தெரிவிக்கபடும்.

தமிழ்நாடு அரசு தொகுப்பூதிய செவிலிய நலசங்கத்தின் மாநில கூட்டம்

 
தமிழ்நாடு அரசு தொகுப்பூதிய செவிலிய நலசங்கத்தின் கூட்டம் வரும் 27-12-2014 அன்று அருண் மேக்சி ஹாலில் நடைபெற உள்ளது.
 
 
தமிழ்நாடு அரசு தொகுப்பூதிய செவிலிய நலசங்கத்தின் கூட்டம்
 
நாள்:-27-12-2014
இடம்:- அருண் மேக்சி ஹாலில் திருச்சி
 
 
கூட்டம் நடைபெறும் அன்று அனைவரும் எதிர்பார்க்கும் சில மகிழ்ச்சியான விஷயங்கள் மற்றும் கேள்விகுறியோடு விடைதெரியாமல் இருக்கும் விஷயங்கள் தெரிவிக்கபடும்.
 
ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் 2015 ஆம் ஆண்டை தவற விட்டால் கண்டிப்பான முறையில் 2016 ஆண்டு இறுதி அல்லது 2017 ஆம் ஆண்டு தான். அதுவும் 2008 பேட்சிற்கே, எனவே 2009, மற்றும் 2010 பேட்ச் செவிலியர்கள் நிலை இன்னும் கேள்வி குறிதான்.
 
 
நீங்கள் NCD, BCD, OCD, RCH என்று உங்களுக்குள் சண்டை போட்டு கொண்டு இருந்தால் அரசு அல்ல ஆண்டவனே வந்தாலும் உங்களை காப்பற்றமுடியாது.
 
விரைவில் புதிதாக தொகுபூதியத்தில் காலியாக உள்ள பணி இடங்களுக்கும் புதிதாக தொகுபூதியத்தில் உருவாக்க பட்ட இடங்களுக்கும் தொகுபூதியத்தில் செவிலியர்களை நியமிக்க MRB எக்ஸாம் வரவிருகிறது.
 
எனவே வரும் காலத்தில் அப்போது உள்ள நிலைமை என்ன, என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.
 
உதாரணமாக 2010 பேட்சில் படித்த பாதி செவிலியர்கள் உள்ளே மீதி பேர் வெளியே.
 
காலம் பலவற்றை மாற்றி விடும்.
 
இருக்கும் பொழுதே அதை ஒழுங்கான முறையில் பயன்படுத்தி வெற்றி பெறாவிட்டால் பின்பு வருத்தபட்டு செய்வதற்கு ஒன்றும் இல்லை.
 
தயவு செய்து அனைவரும் கலந்து கொள்ளவும்.
 
Tamilnadu Govt Contract Nurses Welfare Association's General Body meeting
 
Will be conducted on 27-12-2014 (Saturday)
 
place: Arun Maxi Hall, Trichy, near central bus stand.
 
Time: 2-5pm.
Important Resolution will be taken. Kindly attend all.
Pls forward to all.
 
 
 
 
 
 
 

Sunday, 14 December 2014

DME ORDER-11/11/2014

2008 பேட்சை சேர்ந்த செவிலிய சகோதரிகளுக்கு 11/11/2014 அன்று நடந்த பணி நிரந்தர கவுன்சிலிங்கில் DME SIDE பணி இடங்களை தேர்வு செய்த சகோதரிகளுக்கு APPOINTMENT ORDER அனைத்து இயக்குனர் அலுவலகங்களுக்கும் அனுப்பபட்டு உள்ளது.
 
வாழ்த்துகளுடன் தொகுப்பூதிய செவிலியர்கள்
 
 
  


 

NCD மற்றும் CEMONC ஊதிய உயர்வு ஆணை அனைத்து அலுவலகங்களுக்கும் அதிகாரபூர்வமாக அனுப்பபட்டு விட்டது.


செய்தி துளிகள்

 
 
திருப்பரங்குன்றம் : மதுரை தோப்பூரில் "எய்ம்ஸ்' தரத்திற்கு இணையான "ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி' அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மதுரை அரசு ஆஸ்பத்திரியின் நிர்வாகத்தின் கீழ் தோப்பூர் ஆஸ்டின்பட்டியில் தொற்று நோய் ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இப்பகுதியில் மத்திய அரசின் "எய்ம்ஸ்' (ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்)க்கு இணையான தரத்தில் ஒரு ஆஸ்பத்திரியை அமைக்க பல ஆண்டுகளாக முயற்சிகள் நடந்து வருகின்றன. பா.ம.க.,வின் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது, அந்த ஆஸ்பத்திரி சேலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பின் இங்கு ஆஸ்பத்திரி நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டன. தற்போது மீண்டும் ஆஸ்பத்திரியை தோப்பூரில் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான மதிப்பீடு ரூ. 150 கோடி. இதில் மத்திய அரசின் பங்கு ரூ. 125 கோடி. மாநில அரசின் பங்கு ரூ. 25 கோடி. இது "ஸ்பெஷாலிட்டி கேர்' ஆஸ்பத்திரி என்பதால், இருதய பிரிவு, சிறுநீரகவியல், புற்றுநோய், பிளாஸ்டிக் சர்ஜரி, குடல் நோய் தொடர்பானவை, ரத்தநாளப்பிரிவு போன்றவை இருக்கும். முழுக்க முழுக்க இப்பிரிவுகளுக்கான உள், புற நோயாளிகள், மருந்தகங்கள், ஆய்வுக் கூடங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணிக்கத்தாகூர் எம்.பி., அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் ராமானுஜம் அப்பகுதியை பார்வையிட்ட பின்பு கூறுகையில், "இந்தப் பகுதியில் 385 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 36 ஏக்கரில் ஆஸ்பத்திரி அமையும். இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரி அமைவதில் எங்கு இடர்பாடு உள்ளதோ அதை சரிசெய்ய முயற்சி மேற்கொள்வோம்,'' என்றனர். "தமிழக அரசு சென்னை, திருச்சியில் ஸ்பெஷாலிட்டி கேர் ஆஸ்பத்திரிகளுக்கு ரூ. 100 கோடி வரை ஒதுக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல மதுரைக்கும் நிதிஒதுக்கி "ஸ்பெஷாலிட்டி கேர்' ஆஸ்பத்திரி அமைக்க முன்வரவேண்டும்.
 
 
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க இயலாது: தமிழக அரசு அறிவிப்பு
 
இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க இயலாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ரூ.5200 - ரூ.20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2800, தனி ஊதியம் ரூ.750 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.9300-ரூ.34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஊதியம் ஏறக்குறைய, பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையானது ஆகும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு வழங்கும் அதே ஊதிய விகிதத்தை தமிழக அரசும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கப் பொதுச்செயலாளர் சி.கிப்சன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது கோரிக்கையை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு கடந்த செப்டம்பர் 16-ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், கிப்சனுக்கு தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் அனுப்பியுள்ள விளக்கக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் ஒரு நபர் குழுவிடம் முறையிட்டனர். அதைத்தொடர்ந்து அவர்களுக்கு கூடுதலாக ரூ.750 தனி ஊதியம் வழங்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்பதால் ரூ.9,300 அடிப்படைச் சம்பள கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் இடைநிலை ஆசிரியர்கள் நகர்ப்புறங்களில் பணிபுரிகின்றனர். ஆனால், தமிழக இடைநிலை ஆசிரியர்கள் பெரும்பாலும் கிராமப் பகுதிகளில்தான் பணியாற்றுகின்றனர். கிராமங்களில் வாழ்க்கை செலவினங்கள் மிகவும் குறைவுதான்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1017-க்கும் குறைவான இடைநிலை ஆசிரியர்களே உள்ளனர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 129 பேர் பணியாற்றுகின்றனர். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கினால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.600 கோடி அளவுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும்.
இத்தகைய காரணங்களினால், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையில் நியாயம் இல்லை. ஊதியத்தை திருத்தியமைக்க சாத்தியமும் இல்லை. எனவே, தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
 
 
 
 
 
திருத்தங்கல் மருத்துவமனையில் 3 கோடி ரூபாயில் புது கட்டடம் : பூமிபூஜையுடன் பணிகள் துவக்கம்
சிவகாசி: திருத்தங்கல் ஆரம்ப சுகாதார நிலையம் 50 படுக்கை வசதி கொண்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதை தொடர்ந்து தேவையான கட்டட வசதி, ஆய்வு கூடம் மற்றும் சிகிச்சை கருவிகள் வாங்க அரசு ரூ.4.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் ரூ.3 கோடி செலவில் புதிய வார்டுகளுக்கான கட்டடங்கள், ரூ.1.75கோடிக்கு சிகிச்சை உபகரணங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் நடந்தது. மருத்து இணை இயக்குனர் கதிரேசன் வரவேற்றார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, உதயகுமார் அடிக்கல் நாட்டினர். டி.ஆர்.ஓ., முனுசாமி, ஆர்.டி.ஓ., அமர் குஷ்வாஹா, நகராட்சி துணைத்தலைவர் சக்திவேல் கலந்து கொண்டனர்.