தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்
தமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது
Friday, 17 September 2021
NEED URGENT HELP
Friday, 6 August 2021
Sunday, 16 May 2021
பத்திரிகை செய்தி
தமிழகத்தில் புதிதாக 6000 செவிலியர்கள், 2000 மருத்துவர்கள் நியமனம் – சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!!
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக 2ஆயிரம் மருத்துவர்கள், 6 ஆயிரம் செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் 30,000க்கு அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். மேலும் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர். தினசரி கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்து வருவதால் மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 2500 மேல் உள்ளதால் அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் தவித்து வருவதாக புகார் வந்துள்ளது. அதனால் கூடுதலாக தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மருத்துவர்கள் மற்றும் 6 ஆயிரம் செவிலியர்கள் கொரோனா நோய்யாளிகளை கவனிக்க நியமிக்கப்பட உள்ளதாக சுகராதரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
(நமக்கு தெரிந்த வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலமாக பல்வேறு இடங்களில் பணி நியமனம் நடைபெற்று வருகிறது.
ஒருவேளை MRB மூலம் நடைபெற்றாலும் தகவல் வந்தால் தெரிவிக்கிறோம்).
Wednesday, 12 May 2021
அனைவர்க்கும் செவிலியர் தின வாழ்த்துக்கள்
கொரோனா கொல்லும், செவிலியம் அதனை வெல்லும்
கொரோனா காலத்தில்;
பணியை பிணியென்று பாராமல் ;
உயிரினை பாராமல் ;
உறவினை பாராமல் ;
உலகம் முழுவதும்
கண்ணனுக்கு தெரியாத இந்த கொடிய கொரோனாவை எதிர்த்து களத்தில் நிற்கும்
செவிலிய சகோதரசகோதரிகள் அனைவர்க்கும் செவிலிய தின வாழ்த்துக்கள்.